கெஜ்ரிவால் வந்துவிட்டார்.. வடக்கில் அரசியலே மாறிவிட்டது.. மோடிக்கு பெரிய சிக்கல்? இது பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடக்கில் அரசியல் மாறிவிட்டது. அங்கே அலை இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வந்துவிட்டார் . அவரால் டெல்லியில் முழுக்க ஆம் ஆத்மிதான் ஜெயிக்கும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஜெயிக்கும்., என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

50 நாட்கள் சிறையில் இருந்தபின், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் சிறையில் வெளியே வந்துள்ளார். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப். இங்கு இருபது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு - முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல்களுக்கான பிரச்சாரங்களை கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

Is Arvind Kejriwal Release a major blow for PM Modi in Lok Sabha elections 2024

இந்த நிலையில் இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், இந்தியா முழுக்க மோடி அலை இல்லை. அலை இல்லாத தேர்தல் இது . 1996, 1991ல் நடந்தது போன்ற தேர்தல் ஆகும். அலை இல்லாத தேர்தல் ஆகும். 2004ல் சைலன்ட் அலை இருந்தது. அதை யாருமே கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அப்போது அலை இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அலை இருந்தது. ஆனால் வாஜ்பாய் ஜெயிப்பார் என்று பலர் கூறினார்கள். கடைசியில் முடிவு நமக்கு தெரியும்.

இப்போது அலையே இல்லை. ஆனால் அலை இருப்பதாக கூறுகிறார்கள். மோடி ஜெயிப்பார். மோடி 400 எடுப்பார். 370 எடுப்பார் என்றெல்லாம் கூறுகிறார்கள். வடக்கில் அரசியல் மாறிவிட்டது. அங்கே அலை இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் வந்துவிட்டார் . அவரால் டெல்லியில் முழுக்க ஆம் ஆத்மிதான் ஜெயிக்கும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஜெயிக்கும். கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்யும் இடங்களில் நிலைமை மாறும்.

வடக்கில் நிலைமை பாஜகவிற்கு எதிராக உள்ளது. அங்கே அங்கே அலை இல்லை. ஹரியானாவில் பாஜகவிற்கு எதிராக கடுமையான கொந்தளிப்பு உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் 3 மாநிலங்களில் 150 இடங்களை பாஜக வெல்லும் திட்டத்தில் இருக்கும். ஆனால் அங்கும் அலை இல்லை . உபி யில் காங்கிரஸ் - எஸ்பி கூட்டணி இந்த முறை உள்ளது.

பல சிறிய கட்சிகளை பாஜக வாங்கியதால் அங்கே பாஜக வலிமையாக உள்ளது. உபி 20 இடங்களை பாஜக இழக்கும். 70+ல் இருந்து 50+ ஆக பாஜக குறையும் . நிதிஷ் குமார் மீதான கோபம் காரணமாக பீகாரில் பாஜக கடுமையாக சரியும். மகாராஷ்டிராவில் பாஜக 10க்கு கீழ் போகலாம். அங்கே மெகா கூட்டணி அமைத்துள்ள எதிர்க்கட்சிகள்தான் அதிக இடங்களை வெல்லும். மோடி பல அரசு அமைப்புகளை கட்டுப்படுத்துகிறார்.

அது மட்டுமே பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது. தேர்தல் ஆணையமும் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளது, அதனால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+