கையேந்த வேண்டிய அவசியமில்லை.. ஆர்எஸ்எஸ் உறவை முறிக்கும் பாஜக? மோடி எடுத்த மேஜர் முடிவு? ட்விஸ்ட்
சென்னை: ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு நடுவில் இந்த அறிவிப்பு வந்திருப்பதுதான் அதிக விவாதத்தை ஏற்படுத்துகிறது.

என்ன நடந்தது?: சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. இது ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து பாஜக சுதந்திரம் பெற்றுவிட்ட அறிவிப்பு என்று கூறலாம். நட்டாவே இப்படி கூறி இருக்கிறார் என்றால் அது மோடி - அமித் ஷா அனுமதி இன்றி வந்திருக்காது. இந்த வார்த்தைகளின் விளைவுகளை யோசிக்காமல் நட்டா இதை பேசி இருக்கவே மாட்டார்.
ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வர தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் ஆர்எஸ்எஸ் உறவை பாஜக முறிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. பத்தாண்டுகள் மத்தியில் பாஜகவும், உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசாங்கம் "அவர்களுடையது" என்ற போதிலும், தற்போது உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.
ஆனால் ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.
ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி - அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளது.
உறவு முறிவு: இப்படிப்பட்ட நிலையில்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்
இரண்டு பங்களிக்கும் இடையில் உள்ள உறவை இந்த பேட்டி முறித்துள்ளது. மோடி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நிறைவேற்றினார். அவர்களின் பல ஆண்டு கனவுகளை நிறைவேற்றினார் என்பதெல்லாம் நிஜம்தான். இதை எல்லாம் ஆர்எஸ்எஸ் பாராட்டவே செய்கிறது. ஆனால் பாஜகவில் ஆர்எஸ்எஸ் வாய்ஸ் குறைந்ததை அந்த அமைப்பு விரும்பவில்லை.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது இவர்களின் பிரிவிற்கும் காரணமாகிவிட்டது என்கிறார்கள். முக்கியமாக மோடி வருகையால் ஆர்எஸ்எஸ் பலம் குறைந்துவிட்டது, அவர்களின் கட்டுமானம் குறைந்துவிட்டது என்றும் அந்த அமைப்பு கருதுகிறதாம்.
உதாரணமாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலருக்கும் - உள்ளூர் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேச வேட்பாளர்களுக்கும் செட்டாகவில்லை. இதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. முக்கியமாக் ஆர்எஸ்எஸ் பிரிவில் உள்ள ராஜ்புத் ஜாதியினர் உத்தர பிரதேச வேட்பாளர் தேர்வை முடிவு எடுக்கவில்லை. இது பாஜகவிற்கு அதிர்ச்சியாக மாறி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ் எஸ் மோடியை விட யோகியை அதிகம் விரும்புகிறது. இப்போது மோடி பிரதமர் ஆனால்.. 4ம் முறை பாஜக 2029ல் மீண்டும் வெல்வது கடினம். 2029ல் யோகியை முன்னிறுத்தினால் பாஜக மீதுள்ள அதிருப்தியால் யோகி தோற்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதுவே இப்போது மோடி தோல்வி அடைந்தால்.. அடுத்த முறை யோகியை புதிய முகமாக களமிறக்கி பாஜக 2029ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும் என்ற திட்டத்தை வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் சேர்த்துதான் தற்போது நட்டாவை, ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்று பேச வைத்துள்ளது என்கிறார்கள்.
-
“Back” அடித்த மத்திய பாஜக அரசு.. உடனே நிதியை வழங்க கோரி கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு!












Click it and Unblock the Notifications