சொதப்பிட்டாரு! அண்ணாமலை மீது செம கோபத்தில் டெல்லி? மாற்றப்படுகிறாரா? சீக்ரெட்டை லீக் பண்ணிட்டாங்களே
சென்னை: அண்ணாமலை கூட்டணி முறிவிற்கு ஒரு காரணம் என்பதால் டெல்லி கடும் கோபத்தில் இருக்கிறது. அவர் மீது ஆக்சன் எடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக அதிமுக கூட்டணி மோதலுக்கு இடையில், அண்ணாமலையின் நடைபயணம் இன்னொரு பக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடையில் 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்ட கூட்டம் தற்போது 2 வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பாஜக நிர்வாகிகள் இடையே இந்த நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடக்க வேண்டும் என்றுதான் அவர் கலந்து கொண்டார். 15 நாட்கள் அவர் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறியும் கூட அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபோல் அவர் பிரஸ் மீட்டில் பேச மாட்டார் என்று சீனியர்கள் கூறினார்கள். அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லை என்று சீனியரக்ள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இவர் இங்கே தனியாக பிரஸ் மீட் கொடுத்துக் கொண்டு இருந்தார். பிரஸ் எல்லாம் அண்ணாமலையை சந்திக்க சென்றுவிட்டனர்.

பிரஸ்சை சந்திக்காமல் இருந்தால் சிக்கல் ஆகும். சீனியர்கள் மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றால் தனித்து விடப்படவோம் என்பதால் அண்ணாமலை இப்படி செய்தார். அண்ணாமலை தனது முக்கிய துவத்தை உணர்த்த வேண்டும் என்று அவர் இப்படி செய்தார். அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இங்குள்ள சில சீனியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். ஏனென்றால் அண்ணாமலை கட்சியின் நலனுக்கு எதிராக செல்கிறார் என்று சீனியர்கள் கருதுகிறார்கள். அவர்கள் நினைப்பது இதுதான்.

அவர்களும் கூட மேலிடத்தில் பல முறை இதை சொல்லி பார்த்துவிட்டார். இருந்தாலும் அண்ணாமலைக்கு மேலிடத்தில் ஒரு செல்வாக்கு உள்ளது. அதனால் அவர் தப்பித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் அண்ணாமலை நெகடிவாகவோ, பாஸிட்டிவாகவோ பாஜக பற்றிய பேச்சை தமிழ்நாட்டில் உருவாக்கி உள்ளார். அதனால் அவரை டெல்லி நம்புகிறது. அதோடு திமுகவை கடுமையாக அண்ணாமலை தாக்குகிறார். அதனால் பாஜக மேலிடம் அவரை ரசிக்கிறது. அதன் காரணமாக அவரை விட்டு வைத்து இருக்கிறார்கள்.

அண்ணாமலை கூட்டணி முறிவிற்கு ஒரு காரணம் என்பதால் டெல்லி கடும் கோபத்தில் இருக்கிறது. அவர் மீது ஆக்சன் எடுக்கலாம். ஆனால் அதற்கான நேரம் இது இல்லை. இப்போது வேண்டாம். 5 மாநில தேர்தல் நடந்து முடியட்டும். அதன்பின் அவர் மீது ஆக்சன் எடுக்கலாம் என்று நினைக்கலாம். 5 மாநில தேர்தல் முடியும் வரை பிரச்னையை ஆற போடலாம் என்று நினைக்கலாம். பொதுவாக நட்டா, அமித் ஷா, மோடி ஜெயிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். யாருடன் வேண்டுமானாலும் செல்வார்கள். அவர்கள் அப்படித்தான். அதேபோல் வெற்றிக்கு ஒருவர் தடையாக இருந்தால் அவர்களுக்கு ஆப்பு வைப்பார்கள்.
இப்போது அண்ணாமலை டெல்லியின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார். ஆனால் இப்போது 5 மாநில தேர்தல்தான் முக்கியம். தமிழ்நாடு முக்கியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால் இப்போது பாஜக இவர் மீது ஆக்சன் எடுக்காது. 5 மாநில தேர்தல் முடியும் வரை எதுவும் ஆக்சன் எடுக்க வேண்டாம் என்று வைத்து இருக்கிறார்கள். அதுவரை அதிமுக பற்றி எதுவும் பேச வேண்டாம். அதிமுக பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்று மட்டும் கட்டுப்பாடு விதித்து உள்ளனர். அவ்வளவுதான் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications