விஜய்க்கு எதிராக பவன் கல்யாணை களமிறக்கும் பாஜக.. குறுக்கே வந்த ரோல்ஸ் ராய்ஸ்.. ஆடிப்போன உளவுத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சமீபத்தில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது தமிழக பாஜக. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண். பாஜகவை கொள்கை எதிரி என தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் விஜய்க்குக்கு பதிலடி கொடுப்பதற்காகவே நடிகரான பவன் கல்யாணை அழைத்து வந்தனர்.

தேர்தல் நேரத்தில் விஜய்க்கு பதிலடி கொடுக்க பவனை வைத்து பாஜக மேலிடம் ஒரு திட்டத்தையும் வைத்திருக்கிறது. கருத்தரங்கத்திற்கு வந்த பவன், போதிய கூட்டம் இல்லாததால், மிகச் சாதாராணமாகப் பேசி விட்டு சென்றார். விஜய்யை பற்றி காரசாரமாகப் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த பாஜகவினருக்கு இது ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

இப்படிப்பட்டவரை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை விஜய்க்கு எதிராக எப்படி முன்னெடுக்க முடியும்? தேவையில்லாத ஆணி என்று நக்கலாகவே பேசி வருகிறார்கள் காவிக்கட்சியினர். இது ஒருபுறமிருக்க, பவன் கல்யாண் பயன்படுத்திய கார் ஒன்று உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சென்னை க்கு வந்த பவன்கல்யாண், கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கிருந்து கருத்தரங்கம் நடக்கும் திருவான்மியூருக்குச் செல்ல, மிக விலை உயர்ந்த சொகுசு ரோல்ஸ் ராய் காரில் பயணித்தார் அவர். அந்த ரோல்ஸ்ராய் கார் பாண்டிச்சேரி ரெஜிஸ்ட்ரேசனை கொண்டது.

மார்ட்டின் அனுப்பிய கார்?

அந்த காரை, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் மார்டடின் அனுப்பி வைத்ததாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அது உண்மையா என விசாரித்திருக்கிறது உளவுத்துறை. அப்போதுதான், கார் பாண்டிச்சேரி ரெஜிஸ்ட்ரேசன் தான். ஆனால், அந்த கார் ஜோஸ் மார்டினுக்கு சொந்தமானது அல்ல ; தமிழக பாஜக பிரமுகர் கோவர்த்தனுக்கு சொந்தமானது என தெரிந்து அமைதியானது உளவு த்துறை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, நயினார் போட்டியிட்ட நெல்லைத் தொகுதிக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபாய் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் விசாரிக்கப்பட்டவர் இந்த கோவர்த்தனன் என்பது குறிப்பிடத்தக்கது. பவன்கல்யாணிடம் தனிப்பட்ட முறையில் நெருங்குவதற் காகத்தான் தனது ரோல்ஸ்ராய் காரை பவன் கல்யாணுக்காக அனுப்பி வைத்தார் என்று சொல்கின்றனர் பாஜகவினர். இந்த நிலையில், கோவர்த்த னனை க்ளோசாக கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது உளவுத்துறை.

Is BJP planning to field Andhra Pradesh Dy CM Pawan Kalayan against TVK Vijay in Tamil Nadu

ஒரே நாடு ஒரே தேர்தல் தீவிரம்

'ஒரே நாடு ஒரு தேர்தல்' (ONOP) செயல்படுத்த அரசாங்கம் என்ன மாதிரியாக திட்டமிட்டுள்ளது என்று இங்கே பார்க்கலாம்:

ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்
முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்
இரண்டாம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட தேர்தல் முதல் பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும்
நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் நடக்கும். இதனால் 5 வருடத்திற்கு ஒரு முறை அந்த 3 மாத காலம் மட்டும் தேர்தல் காலமாக இருக்கும்.
ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.

செலவுகள் குறையும்: தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரச்சார செலவுகளும் இதன் மூலம் குறையும். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+