அலறவிடும் பாஜக சீனியர்ஸ்.. அசையும் டெல்லி.. அடியோடு ஆட்டமே கலைகிறதா? அதிமுக கூடாரத்தில் "வெள்ளைபுறா"?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனித்து போட்டி என்ற புள்ளியை நோக்கி தமிழக பாஜக நகர்வதாக தெரிந்தாலும், அது சாத்தியமா? என்பது இந்த நிமிடம்வரை குழப்பமாகவே உள்ளது.. காரணம், அதுகுறித்து ஒரு முக்கியமான தகவல் நமக்கு பிரத்யேகமாக கசிந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து மோதல் என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், "தனித்து போட்டி" என்ற நிலைப்பாட்டை, கடந்த ஒரு வருட காலமாகவே அண்ணாமலை சொல்லி வருவதாக தெரிகிறது.

தனித்து போட்டி: "தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும், ஒருவேளை, அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது கட்டாயம் என்றால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்பது கட்டாயம் கூட்டணிக்கு தேவை" என்று அழுத்தம் திழுத்தமாக, மேலிட தலைவர்களுக்கு அண்ணாமலை எடுத்துரைத்தபடியே இருந்திருக்கிறார். அண்ணாமலை சொல்வதையெல்லாம் பாஜக தலைவர்களும் தவிர்க்காமல் கவனத்தில் எடுத்துகொண்டுள்ளனர்.

Is BJP rejoining alliance with AIADMK Edapadi Palanisamy and What is TN BJP Leader Annamalai going to do

எனினும், தற்போது, கூட்டணி உறவை அதிமுக முறித்து கொள்வதாக அறிவித்துவிட்டது. அதேசமயம், அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சை இதுவரை பாஜக எடுக்காமலேயே உள்ளது.. எடப்பாடி பழனிசாமியையும், சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கியதாக தெரியவில்லை.

விபி துரைசாமி: அதிமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட சிலர் சொல்லி வருகிறார்களே தவிர, பெரும்பாலான தமிழக பாஜக தலைவர்கள், மாறுபட்ட கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.

கேசவ விநாயகம்: குறிப்பாக, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "1996ல் பாஜக தனித்து போட்டியிட்டு, பத்மநாபபுரம் தொகுதியில் வேலாயுதம் முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். இதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.. கேசவ விநாயகம் செய்தியாளர்களிடம் பேசும்போதும், "பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல" என்கிறார்.

இப்படிப்பட்ட தனித்து போட்டியிடவும் தயாராகுங்கள் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்தது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. தேசிய தலைவரே இப்படி சொன்னதால், கிட்டத்தட்ட பாஜக தனித்து போட்டியிடுமோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பியது.

சந்தோஷ்: 4 நாட்களுக்கு முன்பு, எம்பி தேர்தல் பணி தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் சந்தோஷ் பேசும்போது, கூட்டணியை பற்றி நீங்கள் யாரும் சிந்திக்க வேண்டாம்.. அதை கட்சி அதை கட்சி மேலிடம் பார்த்துக்கொள்ளும். கட்சி வளர்ச்சி பணியில் மட்டும், நீங்கள் எல்லாரும் கவனம் செலுத்துங்கள்.. ஒருவேளை, தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, பூத் கமிட்டிகள் தொடர்பாக தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்ட சந்தோஷ், "தேர்தலுக்கான அடிப்படை பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அதையெல்லாம் தூரம் தள்ளிவிட்டு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். வேகத்தை விரைவுப்படுத்த வேண்டும்" என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளார்.. அத்துடன், பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் தெரிவித்த கருத்துக்களையும் குறித்து வைத்துக் கொண்டார் சந்தோஷ்.

அமித்ஷாவுக்கு ரிப்போர்ட்: பிறகு, சென்னையிலிருந்து டெல்லிக்கு திரும்பிய சந்தோஷ், தமிழக பாஜகவினரிடம் ஆலோசித்தவைகளை தொகுத்து ஜே.பி.நட்டாவுக்கும் அமித்ஷாவுக்கும் ரிப்போர்ட்டாக தந்திருக்கிறார்.. குறிப்பாக, பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று தொகுதி பொறுப்பாளர்களும், அதிமுகவுடன் கூட்டணியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று மூத்த தலைவர்களும், வலியுறுத்தியதை அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறாராம் சந்தோஷ்.

மேலும், "அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என வலியுறுத்தும் சீனியர் லீடர்களுக்கு, ஒரு அஜெண்டா இருக்கிறது. தங்களுக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணி இருந்தால்தான் தாங்கள் ஜெயிக்க முடியும் என்று நம்புகின்றனர். பாஜக தனித்து போட்டியிட்டால் தங்களால் ஜெயிக்க முடியாது என்கிற அவநம்பிக்கை இருக்கிறது. பாஜக தனித்து போட்டியிட்டால் தேர்தலில் போட்டியிடக்கூட சீனியர்கள் பலர் முன்வரமாட்டார்கள் என தோன்றுகிறது" என்று மேலிடத்துக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளாராம் சந்தோஷ்..

வெள்ளைக்கொடி: ஏற்கனவே, "ஒருங்கிணைந்த அதிமுக"வுக்காக மேலிட பாஜக முயற்சித்து வரும்நிலையில், சந்தோஷ் தந்திருக்கும் இந்த ரிப்போர்ட், பாஜக தலைவர்களை பெரிதும் யோசனையில் ஆழ்த்தி உள்ளதாம். எனவே, அதிமுக கூடாரத்துக்க, விரைவில் வெள்ளைப்புறா வந்தாலும் வரலாம்.. சமாதானக்கொடி பறந்தாலும் பறக்கலாம் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+