சான்ஸ் தந்த திமுக.. சைக்கிள் கேப்பில் நுழையும் பாஜக.. "விஸ்வரூப விருதுநகர்".. முதல்வருக்கு சங்கடம்

விருதுநகர் விவகாரத்தை பாஜக கையில் எடுக்க போவதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்த சிக்கல்கள் திமுக தரப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்து வரும் நிலையில், அவை ஒவ்வொன்றும் எதிர்க்கட்சிகளால் அரசியலாக்கப்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது... அந்தவகையில், விருதுநகர் பலாத்கார சம்பவத்தை திமுகவுக்கு எதிராக பாஜக கையில் எடுக்கிறது.

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணும், மேலதெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற 27 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் இருந்ததை ஹரிஹரனே, அந்த பெண்ணுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்து கொண்டுள்ளார்..

இந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார்... பிறகு நண்பர்கள் 3 பேரும் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஹரிஹரனிடம் விருப்பம் சொல்லி உள்ளார்கள்.. இதற்கு ஹரிஹரனும் சம்மதித்துள்ளார்.

 செல்போன் நம்பர்

செல்போன் நம்பர்

காதலியுடன் இருந்த ஆபாச வீடியோவையும், செல்போன் நம்பரையும் கொடுத்து பேச அனுமதித்துள்ளார்... இதனால் நண்பர்களான மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது போன்றோர், அப்பெண்ணுக்கு போன் செய்து, ஆபாச வீடியோவை காட்டி, மிரட்டி பாலியல் தொந்தரவு தர ஆரம்பித்துள்ளனர்.. இந்த விவகாரத்தில், மேலும் 4 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.. அவர்களும் ஆபாச வீடியோவை வைத்து பெண்ணை மிரட்டி சீரழித்தனர்.

பட்டியலினம்

பட்டியலினம்

6 மாதமாக இந்த அக்கிரமத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல், பாதிக்கப்பட்ட பெண், விருதுநகர் போலீசில் புகார் தரவும்தான், விஷயமே வெளியே தெரிந்தது.. ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது உட்பட 8 பேர் கைதாகி உள்ளனர்... பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பது முக்கிய முதல் பிரச்சனையாக கிளம்பி உள்ளது.. பெண்ணை நாசம் செய்த 8 பேரில் 2 பேர் திமுக நிர்வாகிகள் என்பது அடுத்த அதிர்ச்சி...

 மிரட்டல்

மிரட்டல்

4 பேர் பள்ளி மாணவர்களாம்.. வீடியோ காட்டி ஒதுக்குப்புறத்தில் பெண்ணை சீரழித்தது 17 வயதுக்கும் குறைவான இந்த பள்ளி சிறுவர்கள்தானாம்.. இது அடுத்த ஷாக்.. இந்த சம்பவத்தை கேட்டு ஒட்டுமொத்த தமிழகமும் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்துள்ளது.. இப்படியெல்லாம் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உத்தரபிரதேசம், பீகார் போன்ற படிப்பறிவு குறைந்த வட மாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த நிலையில், நம்ம தமிழ்நாட்டிலும் வந்துவிட்டதா? என்ற கவலை நிறைந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இந்த குற்ற சம்பவம், விருதுநகர் மாவட்ட அரசியலில் கொந்தளிப்பை தந்து வருகிறது.. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், 8 பேர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. எனினும், இந்த சம்பவம் 2 விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..

 8 பேர் கைது

8 பேர் கைது

முதலாவதாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது போன்றோர் இந்த பெண் மட்டுமல்லாது இப்படி பல பெண்களையும் இதற்கு முன்பு நாசம் செய்துள்ளனராம்.. பாதிக்கப்பட்டவர்கள் யார்? எத்தகைய வழிகளில் அவர்களிடம் அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரிக்க துவங்கி உள்ளனர்..

 திமுக அரசு

திமுக அரசு

அடுத்ததாக, பட்டியலின இளம்பெண் மீதான இந்த பாலியல் அத்துமீறல் கொடுமை, பாஜக கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன... விரைவில் திமுக அரசை கண்டித்தும், திமுக நிர்வாகிகளால் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறலை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 தமிழக பாஜக

தமிழக பாஜக

இப்படித்தான், அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தையும் பாஜகதான் முன்வந்து கையில் எடுத்தது.. பள்ளி நிர்வாகம் தரப்பில் சிலர் மாணவியை மதம் மாறக்கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது... இதை கண்டித்து அண்ணாமலை போராட்டத்தை அறிவித்து, திமுக தரப்புக்கு எரிச்சலை தந்திருந்தார்..

 திருமாவளவன்

திருமாவளவன்

எனினும் திருமாவளவன் ஒரு முக்கிய கருத்தை அப்போது வெளியிட்டிருந்ததை இங்கு மீண்டும் நினைவுகூர வேண்டி உள்ளது.. "மாணவியின் மரணத்துக்கு காரணம் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்தது தான் என்ற பொய்யானதொரு குற்றச்சாட்டைப் பரப்பி, பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகள் மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.. தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ள சனாதன சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உபி போல லிஞ்சிங் எனப்படும் "கும்பல் கொலைகள்' நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி விடுவார்கள்" என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருந்தார் திருமா.

 பட்டியலின பெண்

பட்டியலின பெண்

எனினும், விருதுநகர் பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், மீண்டும் போராட்டத்தை பாஜக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியில் அதிமுகவைவிட பாஜக, மிக தீவிரத்தை காட்டி வருகிறது.. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதுடன், பெண் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் இல்லாத வகையில் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் திமுக அரசுக்கு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு வலியுறுத்த வேண்டி உள்ளது..!

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இப்படித்தான் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, பொள்ளாச்சி சம்பவம் நடந்தது.. அந்த பாலியல் சம்பவத்தில் அதிமுக ​​கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்டதாக சொன்னார்கள்.. இப்போது திமுக ஆட்சி நடக்கிறது.. இதிலும் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.. ஆக மொத்தம் ஆட்சி மாறினாலும், பெண் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் மட்டும் குறையவில்லை என்பதே நம்முடைய மிச்சசொச்ச வேதனையான விஷயம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+