சீண்டிட்டாங்க.. கொதித்த ஸ்டாலின்! அடித்து ஆட முடிவு.. "தூக்கப்படும்" 2 மாஜி அமைச்சர்கள்.. அவங்களா?
சென்னை: ஆளும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்களை குறி வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கவுதம சிகாமணி ஆகியோர் இரண்டு நாட்களுக்கும் முன்பு அமலாக்கத்துறை ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டனர். கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி இருவரும் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்டார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. அதன்பின் அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த டார்கெட்: இன்னொரு பக்கம் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கீழ் வந்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
ஸ்டாலின் முடிவு: இந்த நிலையில்தான் ஆளும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்களை குறி வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடக்கும் நிகழ்வுகளால் திமுக நிர்வாகிகள் பலரும் அப்செட் ஆகி இருக்கிறார்களாம். நாம்தான் ஆளும் கட்சி. ஆனால் அதிமுகவினர் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தினமும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று ஸ்டாலினிடம் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனராம்.
இந்த நிலையில்தான் அதிமுகவை சேர்ந்த ஒரு மேற்கு மண்டல மாஜி அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட மாஜி அமைச்சர் இரண்டு பேரையும் கைது செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கடிதங்களுக்கு ஆளுநர் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆளுநருக்கு உத்தரவிட வழக்கு தொடுக்க ஆளும் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
விசாரணைகளை ஆளுநர் தாமதப்படுத்துவதாக ஆளுநருக்கு எதிராக செக் வைக்கும் விதமாக வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். வழங்கு தொடுக்கும் பட்சத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. அதை பயன்படுத்தி அதிமுக மாஜிகளை கைது செய்யும் திட்டத்தில் ஆளும் தரப்பு இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications