எல்லாம் அடியோடு மாறுது.. கவனிச்சீங்களா? ஆளுநர் மாளிகைக்கு போகும் முதல்வர் ஸ்டாலின்? ராசியாகுறாங்களே!
சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழக அரசோடும், முதல்வர் ஸ்டாலினோடும் எவ்வித கான்ட்ராவெர்சியும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது ராஜ்பவன். கவர்னரும் எவ்வித மோதல் போக்கையும் சீரியசாக எடுக்கவில்லை. இதனால், இந்த வருடம் சுதந்திர தினத்தில் கவர்னர் வைக்கும் தேநீர் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுக்க 78வது சுதந்திர தினம் மிகவும் ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையிலும் மெரினாவில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

சென்னை, கோட்டை கொத்தளத்தில் மீண்டும் தேசிய கொடி ஏற்ற உள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஸ்டாலின் ஏற்பதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன.
பொதுவாக குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு ராஜ்பவனில், தேநீர் விருந்து வழங்குவது கவர்னரின் வழக்கம். எல்லா மாநிலத்திலும் பொதுவாக குடியரசுத் தினம், சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தரப்படும். ஆளுநர் மூலம் அளிக்கப்படும் இந்த நிகழ்விற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட , சட்டசபையில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அந்த வகையில் கடந்த குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின் போது நடத்தப்பட்ட தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவினர் இதில் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் ரவி நீட் தேர்வு மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை என்று கோபத்தால் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இதை புறக்கணித்தன. மாறாக அதிமுக, பாஜக தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே சமயம் 2022ல் நடத்தப்பட்ட சுதந்திர தின தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தாலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலின் உட்பட ஆளும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆளும் கட்சி அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஆளுநர் ரவி வரவேற்றார். இவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து உள்ளே சென்று நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர்.
பொதுவாக இந்த விருந்து வைபவத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசின் உயரதிகாரிகள், நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு ராஜ்பவனில் இருந்து அழைக்கப்படுவர்.
இந்த வருட சுதந்திர தினம்: அவர்களும் கலந்து கொள்வர். தேநீர் விருந்து விமர்சியாகவும் பரபரப்பாகவும் ராஜ்பவனில் களைக் கட்டும். இப்படிப்பட்ட நிலையில், தமிழக அரசோடு பல்வேறு விசயங்களில் கவர்னர் ரவி மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததால், அதை கண்டிக்கும் வகையில் கடந்த ஆண்டு கவர்னரின் தேநீர் விருந்து வைபவத்தை புறக்கணித்தார் முதல்வர் ஸ்டாலின்.
திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் ராஜ்பவனை எட்டிப்பார்க்கவில்லை. அதேசமயம், சென்னையில் மழையும் புயலும் பயமுறுத்தியதால் கடந்த ஆண்டு தேநீர் விருந்தை சுதந்திரத் தினத்தன்று கடைசி நேரத்தில் ரத்து செய்தார் கவர்னர் ரவி.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழக அரசோடும், முதல்வர் ஸ்டாலினோடும் எவ்வித கான்ட்ராவெர்சியும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது ராஜ்பவன். கவர்னரும் எவ்வித மோதல் போக்கையும் சீரியசாக எடுக்கவில்லை. இதனால், இந்த வருடம் சுதந்திர தினத்தில் கவர்னர் வைக்கும் தேநீர் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொள்வாரா? புறக்கணிப்பாரா? என்ற விவாதம், திமுகவிலும் அதன் தோழமைக் கட்சியிலும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications