ராகுல் காந்தி சொன்ன மாதிரியே.. உடைகிறது ரிலையன்ஸ் - டஸால்ட் நிறுவன ரபேல் ஒப்பந்தம்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரபேல் விமானம் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை கைவிட டஸால்ட் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் நிறுவனமான டாஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் விமானங்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்ததில் இருந்தே அதில் பல சர்ச்சைகள் நிலவி வருகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலேயே ரபேல் விமானங்களை வாங்க டாஸ்ஸால்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டது.

Is Dassault Aviation pulling out the Rafale joint venture with Anil Ambani?

ஆனாலும் 2014ல் ஆட்சி மாறிய பின் டாஸ்ஸால்ட் நிறுவனத்தின் 36 ரபேல் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. முழுமையான ஒப்பந்தம் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இதற்காக அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.

காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மற்ற 108 விமானங்கள் உதிரி பாகங்களாக அனுப்பப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். Dassault என்ற நிறுவனம்தான் இந்த விமானங்களை இந்தியாவிற்கும் அளிக்கும்.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி, வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்றும், பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Dassault நிறுவனம் இந்தியாவிற்கு விற்கும் 108 உதிரி பாக விமானங்களை இந்தியாவில் வைத்து தயாரித்து முழு விமானமாக மாற்றுவார்கள். இதற்கான ஒப்பந்தம் டிஆர்டிவோ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கும் அளிக்கப்பட கையெழுத்தானது. இதனால் அந்த தொழில்நுட்பம் இந்திய அரசுக்கு கிடைக்கும். இதனால் சில வருடங்களில் நாமே ரபேல் விமானத்தை உருவாக்க முடியும்.

ஆனால் பிரதமர் மோடி வந்த பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, பங்குதாரர்கள் கைமாறி இருக்கிறார்கள். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் இரண்டும் இதில் இருந்து நீக்கப்பட்டு அங்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்காக எத்தனை கோடி கைமாறியது என்று யாருக்கும் தெரியவில்லை.ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இதில் இந்திய உற்பத்தியாளராக சேர்க்கப்பட்டது. இந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி இருந்தது.

வழக்கு: விமானங்களை கூடுதல் விலைக்கு வாங்கியதாக காங்கிரஸ் கூறியது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இதில் அனுபவமே இல்லை என்றும் புகார் வைத்தார். இந்த 59000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி பல்வேறு மனுக்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்த மறுத்துவிட்டது.

பின்வாங்கல்: இந்த நிலையில்தான் பல்வேறு பிரான்ஸ் ஊடகங்கள் ரபேல் ஒப்பந்தத்தில் லஞ்சப்பணம் கைமாறி இருப்பதாகவும், ஊழல் நடந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தது. இந்த நிலையில்தான் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரபேல் விமானம் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை கைவிட டஸால்ட் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த துறையில் ரிலையன்ஸ் ஏரொஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்திற்கு எந்த அனுபவமும் இல்லாத நிலையில் டஸால்ட் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டு உற்பத்தியை தொடங்க தேவையான முதலீட்டை செய்யாமல் அனில் அம்பானி தரப்பு இருந்ததால் டஸால்ட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+