அதிமுகவை உடைக்க சதி? எல்லாத்தையும் தீர்மானிப்பதே அந்த 2 பேர்தான்? எகிறியடிப்பார் எடப்பாடி?
சென்னை: அதிமுக எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது 2 பேர் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் டெல்லிக்கு பாஸ் ஆவதன் ரகசியமும் அவர்கள்தான் என்று கூறப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி சமீபத்தில் முறிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தவறாக பேசி வருகிறார். தொடர்ந்து எங்கள் தலைவர்களை அவமதித்து வருகிறார். அதனால் அவருடன் கூட்டணியை தொடர முடியாது.

எனவே பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதோடு 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அதிமுக கூறியுள்ளது.
கூட்டணி முறிவு: கூட்டணி முறிவை தொடர்ந்து அதிமுகவில் என்ன நடக்கும் , அதிமுக என்ன ஆகும் என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் அதிமுக எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது 2 பேர் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் டெல்லிக்கு பாஸ் ஆவதன் ரகசியமும் அவர்கள்தான் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் ஏக்நாத் ஷிண்டே மாதிரி இருவரை உருவாக்கிவிட முடியுமா, அதற்கு எடப்பாடி எளிதில் விட்டுவிடுவாரா என்ற பஞ்சாயத்துகள், விவாதங்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டுள்ளன. இதுகுறித்து நமது சிறப்பு நிருபர் அளித்த தகவல்கள் உங்களுக்காக: அதிமுகவில் பாஜக கூட்டணி உடையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் 3 முக்கிய புள்ளிகள்.
நடந்தது என்ன?: இதில், இரு புள்ளிகளை தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது பாஜக தலைமை. கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் கடந்த 25-ந்தேதி மாலை 4:30-க்கு நடந்தது. அன்றைய தினம் காலையில், பியூஸ்கோயலை தொடர்புகொண்ட முக்கிய புள்ளியில் ஒருவர், "கூட்டணியை முறித்துக் கொள்ள எடப்பாடி முடிவு செய்துவிட்டார். கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடக்கும். நாங்கள் முடிவை மறுத்து பேசலாமா? " என்று கேட்டிருக்கிறார்.
சொன்னபடி கேளுங்கள்: அதற்கு, உங்களை பிறகு கூப்பிடுகிறேன் என்று முக்கிய புள்ளியிடம் சொல்லியிருக்கிறார் பியூஸ்கோயல். இதனை அந்த முக்கிய புள்ளி தனது பக்கத்து முக்கிய புள்ளியிடமும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சரியாக 1 மணி நேரம் கழித்து, "அதிமுக எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிக்கலாம். முரண்பட வேண்டாம்.." என்று இரு புள்ளிகளுக்கும் டெல்லியிலிருந்து ஒரு தகவல் பாஸ் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இருவரும் கூட்டணி முறிவை ஆதரித்தனர்.
எடப்பாடிக்கு எல்லாம் தெரியும்: டெல்லியில் இருந்து தகவல் தரப்படவில்லையெனில், 'முடிவில் தங்களுக்கு உடன்பாடில்லை. மற்றபடி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம்' என்று தங்களின் விருப்பத்தை பதிவு செய்யத்தான் இரு புள்ளிகளும் முடிவு செய்திருந்தனர் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதனையெல்லாம் எடப்பாடியும் தெரிந்துதான் வைத்திருக்கிறாராம்.
ஏக்நாத் ஷிண்டே: இதற்கிடையே, கடந்த 25ம் தேதி இரவு டெல்லியை தொடர்புகொண்டு, கூட்டத்தில் நடந்த விபரங்களை அந்த இரு புள்ளியும் புட்டு புட்டாக விவரித்து தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை வைத்து தான் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது பாஜக என்கிறார்கள். மகாராஷ்டிராவில் பாஜகவை எதிர்த்த உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி நிலை என்ன ஆனது என்பதை நாடு பார்த்தது.
இப்போது அதிமுகவுக்கும் அதே நிலையை பரிசளிக்க தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டேக்களாக இருவரை தயார் செய்து வைத்துள்ளது பாஜக. ஆனால் எடப்பாடியின் ஆளுமை அதற்கு இடம்தராது என்ற பெரும் நம்பிக்கை அதிமுகவினருக்கு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications