Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெதக் என அதிர்ந்த ரசிகர்கள்.. தோனி பண்றதெல்லாம் பார்த்தா சரியில்லையே.. சிஎஸ்கேவில் கிளம்பிய சூறாவளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேற்று ஒரே நாளில் செய்த சில சம்பவங்கள் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. பேட்டிங் பிட்சை கணிக்க தவறியது, டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டாவது இன்னிங்சில் பனி காரணமாக பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது ஆகியவை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Is Dhoni retiring during this IPL 2023 season itself and Why did he do these 2 things?

நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 144/6 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகமாக துபே மட்டுமே 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ராணா, ரிங்கு சிங் அதிரடி காரணமாக தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியது. இரண்டு பேருமே அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். இதனால் கொல்கத்தா அணி 18.3 ஓவரிலேயே எளிதாக 147-4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சிஎஸ்கேவின் ப்ளே ஆப் வாய்ப்பு வெகுவாக குறைந்து உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

ஓய்வு

இன்னொரு பக்கம் சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை வெற்றியோடு அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.

குழப்பம்

இந்த நிலையில்தான் தோனியின் ஓய்வு குறித்து கலவையான தகவல்கள் வர தொடங்கி உள்ளன. தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட் உலகில் வைரல் விவாதமாக மாறிவிட்டது.

அதனால் ரசிகர்கள் அதிக அளவில் மேட்சை பார்க்க வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி.. உங்கள் கடைசி சீசனில் உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள் நேற்று பஞ்சாப் ஆட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் அளித்தார்.

அதில்.. நீங்கள்தான் இது என்னுடைய கடைசி சீரிஸ் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நான் இல்லை என்று கூறி இருந்தார்.

இதையடுத்து பேட்டி அளித்த ரெய்னாவும்.. தோனி இந்த சீசன் கப் அடிப்பார்.. அதன்பின் அடுத்த சீசன் ஆடிவிட்டுதான் ஓய்வு பெறுவார் என்று கூறினார், மொத்தத்தில் தோனி ஆடுவாரா, ஓய்வு பெறுவாரா என்று தெரியாத குழப்பாமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தோனி செய்த சம்பவம்:

இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று தோனி செய்த இரண்டு சம்பவங்கள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதன்படி சென்னை அணி வீரர்களுக்கு நேற்று தோனி உணவு விருந்து கொடுத்தார். சேப்பாக்கத்தில் டாப் நிர்வாகிகளும் இதில் உடன் இருந்தனர். சென்னையில் இந்த சீசனில் சிஎஸ்கே ஆடும் கடைசி லீக் போட்டி இது. ப்ளே ஆப் செல்லவில்லை என்றால் சிஎஸ்கே இங்கே ஆட வாய்ப்பு இல்லை.

இரண்டாவதாக நேற்று தோனி சிஎஸ்கே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தார். செல்பி எடுக்க விரும்பாத இவர் நேற்று செல்பி எடுத்தார்.

இந்த இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தோனி ஓய்வு பெற போகிறார் என்பதற்காக இப்படி செல்பி எடுத்தாரா அல்லது சென்னையில் இந்த சீசனில் சிஎஸ்கே ஆடும் கடைசி லீக் போட்டி இது. ப்ளே ஆப் செல்லவில்லை என்றால் சிஎஸ்கே இங்கே ஆட வாய்ப்பு இல்லை என்பதால் செல்பி எடுத்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+