ஸ்டாலினுக்கு போன போன்.. மறுநாளே பிரேமலதா எடுத்த ஷாக் முடிவு! தேமுதிகவில் மாற்றம்.. அப்போ விஜயகாந்த்?
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில் பிரேமலதா முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாகவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. பாஜகவிற்கும் மாநில கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டும் விதமாக இந்த கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

பல லெட்டர்பேட் கட்சிகள் கூட இதில் கலந்து கொண்டன. பாரதிய ஜனதா கட்சி, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு)தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு) ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (பசுபதி குமார் பராஸ் பிரிவு), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக, அப்னா தால் (சோனேலால்), தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (Neiphiu Rio), அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, மிசோ தேசிய முன்னணி, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி, நாகா மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் கலந்து கொண்டன.
ஆனால் தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கூட்டத்திற்கு ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் கூட அழைக்கப்பட்ட நிலையில் தேமுதிக அழைக்கப்படவில்லை. பொதுவாக விஜயகாந்த் மீது மோடிக்கு தனிப்பட்ட அன்பு மரியாதையை உண்டு. ஆனாலும் ஏனோ கூட்டணிக்கான அழைப்பு செல்லவில்லை.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தங்களை அழைக்காமல் அப்செட் செய்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனை பற்றி பிரேமலதா பேசி உள்ளாராம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அவர் வாழ்த்து சொன்னதாக கூறப்படுகிறது. அதோடு அவர்களின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்ததற்கு வாழ்த்து சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில் பிரேமலதா முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாகவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தேமுதிகவில் இனி முக்கிய முடிவுகளை சுயமாக எடுக்கும் விதமாக செயல் தலைவர் பதவியை உருவாக்கி அதில் பொறுபேற்க உள்ளாராம். தற்போது விஜயகாந்த் தலைவர் பதவியில் இருக்கிறார். ஆனால் அவரால் முக்கிய முடிவுகளை எடுக்க முடிவது இல்லை. அவர் ஆக்டிவாகவும் இல்லை. அதனால் பிரேமலதா தேமுதிகவின் செயல் தலைவர் பதவியை உருவாக்கி அதில் பொறுபேற்க உள்ளாராம்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள். தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.. அவர்கள் வந்தால் நமக்கு பயன் இருப்பதை விட பிரச்சனையே இருக்கும். அவர்கள் தேவையில்லாத சுமைதான் என்று ரிப்போர்ட் சென்றதால் தேமுதிகவை பாஜக கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா போன் செய்ததாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தங்களை அழைக்காமல் அப்செட் செய்துள்ளது, என்கிறார்கள்.
செயல் தலைவராக பிரேமலதா நியமிக்கப்படும் பட்சத்தில் புதிய பொருளாளர் தேர்வு செய்யப்படலாம். விஜயகாந்த் தலைவராக தொடர்வார் என்று கூறப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications