திமுக ‘ஓல்டு ஸ்டூடண்ட்’ கட்சியா? துரைமுருகன் யார்? பாஜக குரலில் ரஜினி? சிஎம் பதவிக்கு செக்?
சென்னை: திமுக வயதானவர்களின் கட்சியாக இருக்கிறதா? அக்கட்சியில் இளைஞர்களுக்கு இடம் இல்லையா? ரஜினியின் கருத்துக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?
திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் என்ற கருத்தை நடிகர் ரஜினிகாந்த் பேசிய விவகாரம் இப்போது அக்கட்சிக்குள் ஒரு புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவில் மூத்த தலைவர்களின் ஆதிக்கம் என்பது இப்போது ஏற்பட்டது அல்ல. கடந்த 50 ஆண்டுகளாகவே இந்தப் பிரச்சினை அந்தக் கட்சிக்குள் இருந்து வருகிறது. அண்ணாதுரை காலத்திலிருந்து திமுகவிலிருந்து வருபவர்களில் துரை முருகனும் ஒருவர்.

எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக இருந்து, அவரது செலவில் சட்டப்படிப்பு வரை படித்து வழக்கறிஞரான துரைமுருகன் விசுவாசத்தின் அடிப்படையில் பார்த்தால் அவர் அதிமுக பக்கம்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால், ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்துவிட்டு எம்.ஜி,ஆருக்கு முன்பே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த கருணாநிதியின் பக்கம் கொள்கைப் பிடிப்போடு நின்றவர் துரைமுருகன். அதற்குக் காரணம் அவர் திமுக என்ற கட்சியின் கொள்கை மீதும் கருணாநிதியின் மீது கொண்டிருந்த பற்றுதான். இவருக்கும் கருணாநிதிக்கும் 14 வயது வித்தியாசம். இப்போது 86 வயதாகிறது. இவ்வளவு காலம் காத்திருந்துதான் அவர் கட்சியின் பொதுச்செயலாளராகி இருக்கிறார்.
ஆனால், திமுகவின் பொருளாளராக மு.கருணாநிதி 36 வயதில் தேர்வு செய்யப்பட்டார். 38 வயதில் அதாவது 1962இல் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 45 வயதில் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே பொறுப்பேற்றுக் கொண்டார். இதே வயதில் திமுகவின் தலைவராகவே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அப்படிப் பார்த்தால், துரைமுருகனுக்கு திமுகவில் பொதுச்செயலாளர் பதவி கடந்த 2020 ஆண்டுதான் வழங்கப்பட்டது. 83 வயதில்தான் அவர் கட்சிக்கே பொதுச்செயலாளராகி இருக்கிறார். அதற்கு முன்பாக அவர் 2021இல் தான் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரானார். 2018இல் தான் திமுகவின் பொருளாளர் பதவி இவருக்குக் கிடைத்தது.
வயதால் அவர் திமுகவில் சீனியர் ஆக இருக்கலாம். அவருக்கு கிடைத்துள்ள பதவிகள் யாவும் ஆண்டுகள் பல காத்திருந்து பெற்றவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவரது வளர்ச்சி இருந்ததில்லை. அதிமுகவில் இவரைவிட ஜூனியர்கள் முதலமைச்சர் பதவியிலேயே உட்கார்ந்துவிட்டனர். அதை ஒருநாளும் குறையாகச் சொல்லாதவர் துரைமுருகன். அதற்காக வருந்தாதவர். இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியின் குடும்பத்தினர் நான்காவது தலைமுறையிலிருந்து ஒருவர் வந்தாலும் அவருடன் பணி செய்ய காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாகவே அறிவித்தவர். இவர் அளவுக்கு அதிமுகவில் யாரேனும் சீனியர் இருந்திருந்தால், பல பதவிகளைப் பெற்று உச்சத்திற்கே சென்று இருப்பார்கள்.

முதன்முதலாக 1971இல் காட்பாடி தொகுதியில் சார்பாக வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த இவர், மொத்தம் 12 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அதில் 1984 மற்றும் 1991 என இரண்டு முறை மட்டும் தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆக, மு.கருணாநிதிக்கு இணைக் கோடாக திமுகவில் துரைமுருகன் இருந்துள்ளார். செயல்பட்டுள்ளார்.
அதே அளவுக்கு மிகக் கடுமையாக உழைத்து திமுகவில் உச்சத்திற்கு வந்தவர் ஸ்டாலின். அவரைவிட ஜூனியர்கள் எல்லாம் மந்திரிகளாக இருந்த காலத்தில் இவர் மேயர் பதவியைப் பெற்றவர். திமுகவில் 1968இல் இளைஞரணியை உருவாக்கியதன் மூலம் ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் நடந்தது. அதன்பின்னர் அவர் 1983இல் அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்தப்பட்ட இளைஞரணிக்குச் செயலாளரானார். கிட்டத்தட்ட 40 வருடங்கள் இந்த அணியின் முகமாக அவர் மட்டுமே இருந்தார். 1968இல் கட்சிக்குள் வந்த ஸ்டாலின் தனது 68 வயதில்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி இருக்கிறார். அவருக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தும் படிப்படியாகக் கிடைத்தவைதான்.
அதை மனதில் வைத்தே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது தொடர்பாகச் சர்ச்சை எழுந்த போது அது தொடர்பாகச் செய்தியாளர்கள் 'உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற வாதம் வலுத்து வருகிறதே?' என்ற கேள்வியை முன்வைத்த போது முதல்வர் ஸ்டாலின், 'வலுத்துத்தான் இருக்கிறது. இன்னும் பழுக்கவில்லை' என்று பதிலளித்தார். அந்தப் பதில் எளிதாகச் சொல்லப்பட்டதில்லை. பழுப்பது என்பது திமுகவின் ரத்தத்தில் ஊறிய விசயம். எந்தப் பதவியும் உடனே கிடைத்துவிடாது.
திமுக என்றாலே ஏதோ வயதானவர்களின் கட்சி என்ற தோற்றம் உள்ளது உண்மைதான். ஆனால் 1949 அண்ணாதுரை திமுகவை தொடங்கிய போது அவருக்கு 43 வயது. மு.கருணாநிதிக்கு 25 வயது. அன்பழகனுக்கோ 27 வயது. நெடுஞ்செழியனுக்கோ 29 வயது. இந்த இளைஞர்கள் கூடித்தான் திமுகவை உண்டாக்கினார்கள். 1969இல் சுமார் 87 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு அகற்றினார்கள். அந்த இளைஞர்களின் பட்டாளம் வழி வழியாக அப்படியே திமுகவை கீழே சரிந்துவிடாத ஒரு இயக்கமாகத் தொடர்ந்து தாங்கிப் பிடித்து வருகிறார்கள். அப்படித்தான் திமுக இன்றும் உயிர்ப்புள்ள கட்சியாக இருந்து வருகிறது.

இதை உணராமல் ரஜினி, திமுகவில் வயதான தலைவர்களின் ஆதிக்கம் உள்ளது என மறைமுகமாகக் குத்திக் காட்டி பேசி உள்ளார். அது உட்கட்சியின் விவகாரம். அதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியே தலையிடுவதற்கு தயங்குவார். அதை அறிந்தும் ரஜினி அப்படிப் பேசினார்? என்பது கேள்வி. இதே ரஜினி, கடந்த மக்களவை தேர்தலில் மோடிக்கு வயதாகி விட்டது என கெஜ்ரிவால் சொன்ன போது வாய்மூடி அமைதியாகவே இருந்தார். மேலும் மோடி பிரதமராக வர வேண்டும் என்றும் விரும்பினார்.
திமுக விசயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ள ரஜினி, பாஜக விசயத்தில் வேறு நிலைப்பாட்டை எடுக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதுதான் முக்கியம். பாஜகவில் மூத்த தலைவர்களை மாற்றிவிட்டு, இளம் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பை உருவாக்குவதற்கு என்று தனிக் கொள்கை வகுக்கப்பட்டது. அதற்கு மார்கதர்ஷக் மண்டல்' என்று தனிக் குழுவும் உருவாக்கப்பட்டது. 75 வயதுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்கக்கூடாது என்பது பாஜகவின் கொள்கை. அதைப்போன்று ஒன்றை திமுகவிலும் உருவாக்க வேண்டும் என மறைமுகமாக ரஜினி சொல்ல விரும்புகிறார். அப்படி என்றால் முதல்வர் ஸ்டாலின் அடுத்த 2026இல் 75 வயதைத் தொட்டுவிடுவார். அவரை ஓய்வு எடுக்கச் சொல்கிறாரா ரஜினி எனச் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த 2014 அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவராக வந்தபோது இந்த மார்கதர்ஷக் மண்டல் ஏற்படுத்தப்பட்டது. அப்போது பாஜக மூத்த தலைவர்களை மரியாதை அளித்து அவர்களின் அந்தஸ்தை உயர்த்துகிறதா? இல்லை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முயல்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. பாஜகவின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் கடந்த ஜூன் மாதமே ராஜ்நாத்சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இந்த மார்கதர்ஷக் மண்டல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு முன்பாக முரளி மனோகர் ஜோஷி, அத்வானி ஆகிய இருவரும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் மோடியும் ராஜ்நாத்சிங் ஆகிய இருவரும் இணைக்கப்படுவதற்கு முன்பாக திகார் சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், 2024 மக்களவைத் தேர்தலின் போது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். கட்சியின் விதிப்படி மோடிக்கு வயதாகிவிட்டது. அவர் பிரதமராக நீடிக்க முடியாது. அவருக்குப் பதிலாக அமித்ஷா தான் பிரதமராக இருக்கப் போகிறார் என்றார். அதை பாஜகவும் அமித்ஷாவும் மறுத்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடியும் ராஜ்நாத்சிங்கையும் மார்கதர்ஷக் மண்டல் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
அதேபோல் மறைமுகமாக திமுகவில் உள்ள சீனியர்களை ஓரங்கட்ட ரஜினி ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுக்கிறார். அதன்மூலம் உதயநிதி அண்ணாமலை ஒரு புதிய களம் உருவாகும். அதன் மூலம் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முடியும். ஆக, ரஜினி பாஜகவுக்குச் சாதகமான திட்டத்தை முன்வைக்கிறார் என்கிறார்கள் சில உபிகள்.

Click it and Unblock the Notifications