ஆதவ் அர்ஜுனா வீட்டை சூழ்ந்த அமலாக்கத்துறை டீம்.. பிரஷர் போட்ட திமுக? பின்னணியில் நடந்தது என்ன?
சென்னை: லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா எதிராக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கு பின்னணியில் திமுகவின் அழுத்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
லாட்டரி மார்ட்டினுக்கு தொடர்புடைய அவரது வீடு, அலுவலகங்களிலும், மார்ட்டினின் மருமகனும் சிறுத்தைகள் கட்சியில் து.பொ.செ.வுமான ஆதவ்அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் ஆதவ். மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் களமிறங்கி தீவிரமாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

அதிகாலையே அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களுக்கு சென்றனர். ஒரே நேரத்தில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இப்படிப்பட்ட நிலையில்தான் லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா எதிராக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டுக்கு பின்னணியில் திமுகவின் அழுத்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, நேற்று வரை சினிமாவில் நடித்து வந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? என்று உதயநிதி ஸ்டாலினை வம்புக்கிழுத்ததுடன், முதல்வர் ஸ்டாலினின் முடிவையும் நக்கலடிப்பது போல பேசினார் ஆதவ். திமுகவை ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் சீண்டும் வகையில் கடுமையாக பேசினார். இதனை முதல்வரும் அவரது குடும்பமும் ரசிக்கவில்லை. ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவனுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு மூலம் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவின் வருத்தத்தையும் திருமாவிடம் பதிவு செய்தார் வேலு. ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை திருமா. அதேசமயம், திமுக கூட்டணியை விட்டு சிறுத்தைகளை வெளியே கொண்டு வரும் அரசியலையும் செய்து வருகிறார் ஆதவ். அவரது யோசனைக்கு திருமாவும் ஆதரவாக பேசுகிறார். அப்படி பேசிய ஒரு விசயம் தான், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற திருமாவின் பேச்சு.
இது மட்டுமல்லாமல், பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் போதை எதிர்ப்பு மாநாடு என்று திமுக அரசுக்கு எதிராக திருமா நடத்திய மாநாட்டின் பின்னணியில் ஆதவ் தான் இருந்தார். ஆக, திமுகவுக்கு எதிராக இயங்கும் ஆதவ் மீது, நாம் வலியுறுத்திய நிலையிலும் நடவடிக்கை எடுக்காமல் திருமா இருந்து வருவதை திமுகவால் ஏற்க முடியவில்லை. மேலும், விஜய்யின் கட்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவிகளை மார்ட்டின் செய்து வருகிறார்.
இதன் பின்னணியிலும் ஆதவ் இருப்பதாக கருதுகிறது திமுக. இந்த நிலையில்தான், மார்ட்டின் மற்றும் ஆதவ்விடம் இருக்கும் கறுப்பு பணத்தை முடக்க வேண்டும் என்ற திட்டத்தில், அமலாக்கத்துறையிடம் திமுக அழுத்தம் கொடுத்துள்ளது. இதற்காக சில அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர். மத்திய அரசுடன் சமீபகாலமாக சுமூகமான சூழலை திமுக கையாண்டு வருவதால், ஒரு பிடிமானமுள்ள நெருக்கம் மத்திய , மாநில அரசுகளுக்கிடையே உருவாகியிருக்கிறது.
அந்த நட்பின் அடிப்படையில் டெல்லியில் கோரிக்கை வைத்திருக்கிறது திமுக அரசு. அதை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள். ஏற்கனவே மார்ட்டினுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் கீழ்க்கோர்ட் மார்ட்டினுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு செய்த மேல்முறையீட்டில் அந்த தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மார்ட்டினுக்கு எதிரான வழக்கு நடந்து வரும் நிலையில்தான், அமலாக்கத்துறையும் இதன் உள்ளே நுழைந்து, இரண்டாவது முறையாக சோதனை நடத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications