பாஜகவை ஃபாலோ செய்யும் திமுக.. திடீர் மாற்றம்.. அதிகாரம் யாருக்கு? “மினிஸ்டரி?” ஸ்டாலின் பிளான் என்ன?
சென்னை : எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை திமுகவின் அணிகளில், தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டு அதற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அணிகளில் தலைவர், செயலாளர் என இருவரும் இருப்பதால், யாருக்கு அதிகாரம் என்பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுக அணிகளைப் பொறுத்தவரை செயலாளர் பதவிகளே உச்சபட்ச அதிகாரம் வாய்ந்த பொறுப்பாக இருந்து வரும் நிலையில், தற்போது புதிதாக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுகவின் மகளிர் அணி, மாணவர் அணி, மருத்துவர்கள் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் புதிதாக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணியில் செயலாளர்கள் மட்டுமே உள்ளனர்.

திமுக நிர்வாகிகள்
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு, கிளை, ஒன்றியம், நகரம், பேரூர், மாவட்டம் என கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதம் திமுக பொதுக்குழு கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக திமுகவில் உள்ள பல்வேறு அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள் - செயலாளர் - இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் - உறுப்பினர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும், தலைமைக் கழக நிர்வாகிகளும், உயர்மட்ட குழுக்களின் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய மாற்றங்கள்
திமுக கட்சி அமைப்பைப் பொறுத்தவரை இந்த முறை சில முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுகவில் ஏற்கனவே இருக்கும் அணிகளோடு திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய புதிய துணை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அணிகளில் புதிதாக தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை திமுகவின் அணிகளில் செயலாளர் பதவியே உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக இருந்து வந்த நிலையில், தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அதற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளர் - தலைவர்
அணிகளின் தலைவர் பதவிகளில், அதே அணியில் ஏற்கனவே செயலாளராக இருந்தவர்களின் பெயர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. மருத்துவர்கள் அணி செயலாளராக இருந்து வந்த கனிமொழி சோமு எம்.பி தற்போது அதே அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறியாளர் அணியின் செயலாளராக இருந்த துரை கி.சரவணன் இந்த முறை அதே அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அதே அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நியமனங்கள்
திமுக மாணவர் அணிக்குத் தலைவராக ராஜீவ் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளராக இருந்தவர். திமுக மகளிர் அணிக்குத் தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் அணியின் தலைவராக பூங்கோதை ஆலடி அருணா நியமிக்கப்பட்டுள்ளார். அயலக அணித் தலைவராக கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்பு சாரா ஓட்டுநர் அணித் தலைவராக டி.எம்.கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளர்கள் மாற்றம்
திமுக மருத்துவ அணியின் செயலாளராக, கருணாநிதியின் குடும்ப மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணியின் செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியாளர் அணியின் செயலாளராக கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணிக்கு செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ செங்குட்டுவன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதயநிதி - டி.ஆர்.பி.ராஜா - தயாநிதி
திமுகவின் அணிகளில் புதிதாக தலைவர், துணைத் தலைவர்கள் பொறுப்பைக் கொண்டு வந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமைப்பு ரீதியாக கட்சி அணிகளில் இப்படியான மாற்றம் கொண்டு வரப்பட்டது ஏன் என திமுகவுக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன. தலைவர் பதவியை எல்லா அணிகளுக்கும் கொண்டு வராமல் இளைஞரணி, ஐடி விங் உள்ளிட்டவற்றிற்கு தவிர்த்தது ஏன் என்றும் கேள்விகள் எழுகின்றன. இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக இருப்பதால், பெயரளவுக்குக் கூட அவருக்கு மேலே ஒரு பதவியை உருவாக்க தலைமை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோலவே ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு மேலேயும் தலைவர் பதவிக்கு நியமனம் செய்து சிக்கலை ஏற்படுத்த ஸ்டாலின் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிகாரம் யாருக்கு?
ஒரு அணியில் தலைவர் - செயலாளர் என இருவர் நியமிக்கப்படும்போது, அணி ரீதியாக அதிகாரம் யார் கையில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இருப்பது போல செயலாளரே ஆதிக்கம் செலுத்துவாரா அல்லது தலைவர் பதவியே உயர்ந்தது என்கிற ரீதியில் தலைவரே முக்கிய முடிவுகளை எடுப்பாரா என திமுக தொண்டர்களே குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தலைவர் - செயலாளர் இடையே அதிகார மோதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.

அவைத்தலைவர் போல?
இனியும் அணிகளில் செயலாளர்களின் கையே ஓங்கி இருக்கும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணிகளின் தலைவர் பதவி கௌரவப் பதவியாக கருதப்படும் என்கிறார்கள். திமுகவில் மாவட்ட கழகங்களில் அவைத் தலைவர் என்ற பதவி பல காலமாக இருக்கிறது. ஆனால், மாவட்ட செயலாளரே அதிகாரம் மிக்கவராக கருதப்படுகிறார். திமுக மாவட்ட செயலாளர் என்றால் கலெக்டர் அளவுக்கு பவர் கொண்டவர் என்ற பேச்சும் கட்சிக்குள் உண்டு. அதேபோலவே, அணிகளிலும் செயலாளரே அதிகாரம் பெற்றவராக இருப்பார் என்கிறார்கள்.

ஏன் இப்படி?
அணிகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு கடும் போட்டி நிலவியதன் காரணமாக, திமுகவுக்காக உழைக்கும் பெரும்பாலானோருக்கு பதவி கொடுக்கும் நோக்கிலேயே தலைமை இப்படி ஒரு முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. யாரும் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையிலேயே, புதிதாகவும் பதவிகளை உருவாக்கி, பலரை சமாதானப்படுத்தி இருக்கிறார்களாம்.

அதிருப்திகளை தவிர்க்க
மாவட்ட கழகப் பொறுப்புகளில் இடம் கிடைக்காத நிலையில், நன்றாகச் செயல்படும் நிர்வாகிகள், இளைஞர்கள் அதிருப்தி அடையாமல் உற்சாகமாகக் கழகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் உழைப்பை ஊக்குவிக்க வேண்டும், அதன் மூலம் கட்சிக்கு பலம் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக தலைமை கணக்குப் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அணிகளின் மாற்றங்கள், 2024 தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறதாம் திமுக தலைமை.

பாஜக போல
பாஜகவில் புதிதாகச் சேர்பவர்களுக்குக் கூட அக்கட்சி மாநில பொறுப்புகளை வழங்கி வருகிறது. புழக்கத்திலேயே இல்லாத பெயர்களில் எல்லாம் அணி தொடங்கி அதற்கு மாநில நிர்வாகிகளையும் நியமிக்கின்றனர். கட்சியில் மாநிலப் பதவியில் இருப்பதை பலரும் மதிப்பு மிக்கதாக கருதுவது திமுக தலைமையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. அதன் அடிப்படையிலேயே, மாநிலப் பொறுப்புகளில் ‘தாராளம்' காட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

டீ-புரொமோஷன்?
செயலாளர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் என்றால், ஏற்கனவே செயலாளர்களாக இருந்த சிலர் இந்த முறை தலைவர் ஆக்கப்பட்டிருக்கிறார்களே.. அவர்களுக்கு எல்லாம் டீ-ப்ரொமோஷனா என்றும் திமுக தொண்டர்கள் மத்தியிலேயே விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் அணியில் கனிமொழி சோமு, பொறியாளர் அணியில் துரை கி.சரவணன், செய்தித் தொடர்பு அணியில் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ஏற்கனவே செயலாளர்களாக இருந்த நிலையில் தற்போது அதே அணியின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறொரு கணக்கு - அமைச்சரவை?
அணிகளில் செயலாளர்களாக இருக்கும் சிலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாக, அணி சார்ந்த பணிகளில் தொய்வு ஏற்படாமல் கூடுதல் பொறுப்பாக அந்த அணியின் தலைவர் செயல்படுவதற்கு ஏதுவாகவும் இந்த நியமனங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மருத்துவர் அணி செயலாளர் எழிலன், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோருக்கு மினிஸ்டரியில் ஜாக்பாட் அடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், அமைச்சர்களாக வாய்ப்புள்ளவர்கள் என கிசுகிசுக்கப்படும் வேறு இருவரின் அணிகளில் தலைவர்களே நியமிக்கப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
-
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
விஜயின் தவெக கூட்டணியில் இணையப்போகும் புதிய தமிழகம்? கிருஷ்ணசாமி சொன்ன பதில்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?










Click it and Unblock the Notifications