"ஒட்டுமொத்த உருவம்".. சிக்னல் கொடுத்த ஸ்டாலின்.. அட இப்படி ஒரு பேச்சு அடிபடுதே.. பரபரக்கும் திமுக!
சென்னை: தேசிய அரசியலில் கால் பதிக்க காய் நகர்த்தி வரும் திமுக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களில் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் திமுக தனது கட்சி அலுவலகத்தில் திறந்துள்ள நிலையில்.. தேசிய அரசியல் பக்கம் திமுக கவனம் செலுத்துகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளும் திமுக சார்பாக டெல்லியில் புதிய அலுவலகம் கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. 3 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்.. அங்கு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி ராஜா, விசிக தலைவர் எம்பி திருமாவளவன், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பிக்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது?
இந்த விழாவிற்கு முன்புதான் முதல்வர் ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அங்கு டெல்லி பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில விஷயங்களை பேசினார்.. அதில் டெல்லியில் திமுக கட்சி அலுவலகம் திறந்து இருக்கிறது. ஆனால் இதனால் என்னவோ திமுகவின் அந்தஸ்து டெல்லியில் உயர்ந்ததாக என்ன வேண்டாம்.

திமுக அந்தஸ்து
டெல்லியிலும், தேசிய அளவிலும் திமுகவிற்கு எப்போதும் அந்தஸ்து இருக்கிறது. தேசிய அரசியலில் எப்போதுமே திமுக முக்கிய கட்சிதான். ஏன் இந்த நாட்டின் பிரதமர்களை கூட திமுக தேர்வு செய்ய காரணமாக இருந்துள்ளது. இந்த நாட்டு குடியரசுத் தலைவர்களையும் திமுக தேர்வு செய்ய காரணமாக இருந்துள்ளது. இப்போதும் கூட நாடளுமன்றத்தில் திமுகதான் மூன்றாவது பெரிய கட்சி. தேசிய அரசியலில் ஏற்கனவே நாம் பெரிய கட்சிதான்.

மாநில அரசியல்
மாநில அரசியல், தேசிய அரசியலுக்கு வேறுபாடு இல்லை. மாநிலங்கள் சேர்ந்த அரசியல்தான் தேசிய அரசியல். மாநிலங்களில் ஒட்டுமொத்த உருவம்தான் தேசியம். இரண்டையும் வேறுபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்று ஸ்டாலின் பேசி இருந்தார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சும், திமுக டெல்லியில் அடுத்தடுத்து எடுக்கும் முன்னெடுப்புகளும் தேசிய அளவில் திமுக கால் பாதிக்க எடுக்கும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி
தேசிய அளவில் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க திமுக முயன்று வருகிறது. மம்தா பானர்ஜி, கேசிஆர் ஆகியோரும் இதே முயற்சியில் இருந்தாலும், காங்கிரசையையும் சேர்த்து பெரிய கூட்டணியை உருவாக்க திமுக நினைக்கிறது. இதன் வழியாக தேசிய அரசியலிலும் கால் பதிக்க முயன்று வருகிறது. டெல்லியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூட, காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளுடன் தேசிய அளவில் நட்புறவை பலப்படுத்த வேண்டும். மாநில கட்சிகள் பாஜகவிற்கு எதிராக சேர வேண்டும்.

அழைப்பு விடுத்த ஸ்டாலின்
இதற்காக அனைத்து மாநிலங்களிலும் குழுக்களை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டார். காங்கிரசை உள்ளடக்கிய தேசிய அளவிலான கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் சிக்னல் கொடுத்துள்ள நிலையில்தான் திமுக தேசிய அளவில் தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதாவது தமிழ்நாட்டிற்கு வெளியே திமுக போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

டெல்லி மேற்கு வங்கம்
டெல்லி, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கு திமுக 2024ல் தேசிய கூட்டணியில் இணைந்து போட்டியிட முயலும் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதோடு உத்தர பிரதேசத்தில் தலித் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையே ஓபிசி இடஒதுக்கீட்டால் முதல்வர் ஸ்டாலினின் இமேஜ் உயர்ந்து உள்ளது . இதை பயன்படுத்தி தேசிய அளவில் கூட்டணி அமைக்கப்பட்டால், திமுக தனது தரப்பில் சிலரை இங்கே தேர்தலில் களமிறக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய கூட்டணி
அதாவது தமிழர்களை அங்கே நிறுத்தாமல் அந்த மாநிலத்தில் பிரபலமாக இருப்பவர்களை திமுக வேட்பாளர்களாக நிறுத்தும் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன. திமுக இத்தனை தொகுதிகளில் தேசிய அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே சில ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இந்த தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய அளவில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் இது சாத்தியம் ஆகலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications