Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

284.. எப்படி 472 ஆக மாறியது? பொய் கணக்கு காட்டிய அமலாக்கத்துறை? பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நேற்று மீண்டும் விசாரித்தார். இதில் அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பு முக்கியமான சில வாதங்களை வைத்தது.

முதலில் அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார். அவர் இப்படி மறைவாக உள்ள நிலையில் எப்படி செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வர முடியும்.

Is ED giving fake numbers in Tamil Nadu Ex Minister Senthil Balaji bail case in court?

அமலாக்கத்துறை வாதம்: அவர் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை எப்படி ஜாமீனுக்கு காரணமாக சொல்ல முடியும். அதை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது. காலம் கடக்கிறது என்றால்.. வழக்கை துரிதப்படுத்தலாம். அவர் ஒரே காரணத்தை வைத்து மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை முடிக்க வேண்டும். விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்று வாதம் வைத்துள்ளனர் .

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதம் வைத்தார். அவர் வைத்த வாதத்தில், அமலாக்கத்துறை முதலில் 284 பென்டிரைவ்களை பறிமுதல் செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து உள்ளன. இதனால் அமலாக்கத்துறை வாதங்களை ஏற்க கூடாது. மற்றொரு அறிக்கையில், 472 பென்டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிது. ஹெச்.பி ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் சீகேட் ஹார்ட் டிஸ்க்கை தாக்கல் செய்துள்ளனர்.

அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு நிறைவடைந்துவிட்டதாகவும் அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாகவும் ED கூறிவிட்டது

அமலாக்கத்துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கினால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் வைத்துள்ளது. அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு பின்னணி; சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

விசாரணை: செந்தில் பாலாஜி வழக்கு; இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார்.

பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 18வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரம் முன் விசாரணை; அதன்பின் இரண்டு வாரம் முன் இதில் விசாரணை நடந்தது. அப்போது 19வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, ​​பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.

சிறையில் அடைப்பு: 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது, ​​இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.

"அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, ​​சிறைக்குள் இருக்கும் போது, ​​இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+