Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ தலைவனா? நான் தலைவனா? சீண்டி பார்த்த சிவி சண்முகம்? எடப்பாடி தந்த பதிலடி! அதிமுகவில் புது நெருப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீ தலைவனா.. நான் தலைவனா என்ற பிரச்சனை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் - சிவி சண்முகத்திற்கும் இடையில் அதிமுகவில் நிலவி வருவதாக அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சிவி சண்முகம் விவகாரமும் கட்சியில் உச்சம் பெற்றுள்ளது. அவரின் சமீபத்திய பேச்சுக்கள், செயல்கள் தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு சமீபத்தில் எம்ஜிஆர் நினைவூட்ட நாளில் கூட சிவி சண்முகம் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு தனியாக வந்து மரியாதை செய்தார்.

இந்த நிலையில்தான் அதிமுகவில் என்ன நடக்கிறது என்று அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி

பேட்டி

கேள்வி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் - சிவி சண்முகத்திற்கும் அப்படி என்னதான் மோதல்?

பதில்; என்ன பிரச்சனை இருக்க முடியும். நீ தலைவனா.. நான் தலைவனா என்பதுதான் பிரச்சனை. இரண்டு பேருமே வளமான தலைவர்கள். இரண்டு பேருமே மூத்தவர்கள். இரண்டு பேருக்குமே தொண்டர்கள் ஆதரவு உள்ளது. என்னை வைத்து தானே நீ வளர்ந்தாய்.. என்னால்தான் நீ வளர்ந்தாய் என்ற மோதல்தான் இரண்டு பேருக்கும் உள்ளது. போன சட்டசபை தேர்தலில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு 10.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது எடப்பாடி. அந்த வன்னியர்கள் வாக்குகள் காரணமாகவே நீ கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற்றாய் என்ற எண்ணம் சிவி சண்முகத்திற்கு இருக்கிறது. என்னுடைய ஜாதிதான் எடப்பாடியை காப்பாற்றியது என்று சிவி சண்முகம் நினைக்கிறார். இந்த மோதல் இத்தனை காலம் புகையாக இருந்தது. தற்போது இது நெருப்பாக வெளியே வந்துவிட்டது அவ்வளவுதான். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சிவி சண்முகம் கலந்து கொண்டார். ஆனால் அவர் வந்ததற்கு காரணமே நோட்டம் இடத்தான். யாரெல்லாம் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கட்சியில் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கத்தான் சிவி சண்முகம் அந்த கூட்டத்திற்கு வந்தார்.

 பொதுக்குழு

பொதுக்குழு

கேள்வி: கடந்த பொதுக்குழுவில் எடப்பாடிக்கு பக்க பலமாக இருந்தது சிவி சண்முகம்தான். அப்படி இருக்க சிவி சண்முகம் கடந்த 6 மாதத்தில் எடப்பாடிக்கு எதிராக திரும்பியது ஏன்?

பதில்: ஓபிஎஸ் கட்சியில் வலிமையாக இருக்கிறார் என்பதால்தான் சிவி சண்முகம் அவரை வெளியே அனுப்பினார். ஆனால் அதுவே சிவி சண்முகத்திற்கு எதிராக திரும்பிவிட்டது. ஓபிஎஸ்ஸை வெளியே அனுப்பியதில் சிவி சண்முகத்திற்கு பெரிய பங்கு உள்ளது. இந்த நன்றியும் எடப்பாடிக்கு உள்ளது. ஆனால் அந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று சிவி சண்முகம் கூறினார். இதை சிவி சண்முகம் சுயமாக கூறியது ஏன் என்ற கேள்வி எடப்பாடிக்கு எழுந்துள்ளது. இந்த அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது என்ற கேள்வி எடப்பாடிக்கு சிவி சண்முகம் மீது எழுந்தது. அப்போதில் இருந்தே இவர்கள் இருவருக்கும் இடையில் இடைவெளி இருக்கிறது,. சிவி சண்முகத்தை ஓரம்கட்டிவிட்டு முனுசாமியை தூக்கிவிட எடப்பாடி பார்த்தார். இதனால் எடப்பாடி - சிவி சண்முகம் இடையே மோதல் முற்றிவிட்டது.

எடப்பாடி

எடப்பாடி

கேள்வி: எடப்பாடி இடத்திற்கு சிவி சண்முகம் தன்னை நகர்த்திக்கொள்ள பார்க்கிறார் என்கிறீர்களா?

பதில்: சிவி சண்முகம் எடப்பாடிக்கு தன்னை சமமாக பார்க்கிறார். என்னுடைய இடத்தை எடப்பாடி பிடித்துவிட்டார் என்று சிவி சண்முகம் நினைக்கிறார். அதுதான் உண்மை. கேபி முனுசாமி - சிவி சண்முகம் ஒரே ஜாதி. சிவி சண்முகத்திற்கு எதிராக கேபி முனுசாமியை வளர்த்துவிட பார்க்கிறார். இரண்டு பேருமே வன்னியர்கள். இவர்களின் மோதலை எடப்பாடி பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார். ராமசாமி படையாச்சியார் காலத்தில் இருந்தே வன்னியர் அரசியலுக்கு தமிழ்நாட்டில் முக்கிய பங்கு இருக்கிறது. முனுசாமி முன்பு பெரிய தலைவராக அதிமுகவில் இருந்தார். ஜெயலலிதா முனுசாமியை ஓரம்கட்டிய போது சிவி சண்முகம் பெரிய ஆள் ஆகிவிட்டார். இப்போது அதிமுகவில் முக்குலத்தோரை வெளியேற்ற முக்கிய காரணம் சிவி சண்முகம். இவ்வளவும் செய்து நான் உன்னை கொண்டு வந்து இருக்கிறேனா அதிமுகவில் நான் தானே பெரிய தலைவர் என்று எடப்பாடிக்கு எதிராக சிவி சண்முகம் நினைக்கிறார்.

சிவி சண்முகம்

சிவி சண்முகம்

கேள்வி: சிவி சண்முகத்திற்கும் - கேபி முனுசாமிக்கும் இடையில் நடக்கும் மோதலில் யார் கை ஓங்கும்?

பதில்: அதெல்லாம் அமித் ஷாதான் முடிவு செய்வார். சிவி சண்முகத்திற்கு ஆதரவாக அமித் ஷா சென்றால் எடப்படியால் அதை எதிர்க்க முடியுமா? ரெய்டு வந்தால் என்ன செய்வார்கள்? அதிமுக கூட்டத்திற்கே அரசியல் பெரிய விஷயம் இல்லை. அவர்கள் ரெய்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே நோக்கம். முடிந்த அளவு ரெய்டு நடக்க கூடாது என்பதுதான் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவியின் இப்போதைய அரசியல். இவர்கள் எல்லாம் இருக்கும் வரை அதிமுக சரியாக இருக்காது. அதிமுகவில் இப்போது தொண்டர்கள் ஆதரவும் இல்லை.

அமித் ஷா

அமித் ஷா

கேள்வி: அமித் ஷா சொன்னதுதான் அதிமுகவில் நடக்கும் என்கிறீர்கள்.. ஆனால் பாஜக எங்களை கட்டுப்படுத்தவில்லை என்று எடப்பாடி சொல்கிறாரே?

பதில்: அப்படித்தான் சொல்ல வேண்டும். செய்தியில் அப்படி வர வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் கட்சியில் இருக்கும் எல்லோருக்கும் நிலைமை என்ன வென்று தெரியும். ஊடகத்தில் நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று காட்ட வேண்டும் என்று எடப்பாடி சொல்லி இருப்பார். இது பாஜகவிற்கும் தெரியும். இதெல்லாம் வெறும் வாய் சவடால். மக்கள் இதை எல்லாம் நம்ப மாட்டார்கள். பழனிசாமியால் பாஜகவை எதிர்க்க முடியாது. அமித் ஷா நிறுத்து என்று சொன்னால் எடப்பாடி நிறுத்திதான் ஆக வேண்டும், என்று அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+