Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீசை வச்ச வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா..? ஆவேச எடப்பாடி இன்று அப்படியே மௌனம்.. அதிமுக படுதோல்வி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலினை ஆவேசமாக விமர்சித்துப் பேசியிருந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விட்டது அதிமுகவினர் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

இடைத்தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'மீசை வச்ச, வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தால், வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்' என ஆவேசப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் தீவிர பிரச்சாரம் ஈரோடு கிழக்கில் வொர்க் அவுட் ஆகவில்லை என்பது, தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி தெளிவாகிறது.

ஆடு மாடுகளைப் போல

ஆடு மாடுகளைப் போல

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல கொட்டகையில் அடைத்துள்ளது ஜனநாயகப் படுகொலை என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் தேர்தல் விதிமுறைகளை திமுக அமைச்சர்கள் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மீசை வச்ச ஆம்பளையா?

மீசை வச்ச ஆம்பளையா?

திமுக தலைவர் 25 அமைச்சர்களை ஏவிவிட்டு, முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 25 அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் நம்மைக் கண்டு பயப்படுகிறார்கள். ஸ்டாலின் அவர்களே உண்மையிலேயே வேட்டி கட்டி, மீசை வைத்த, தலைவராக இருந்தால், ஆண்மகனாக இருந்தால், வெக்கம், மானம், சூடு, சொரனை இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் வீட்டிலேயே விட்டு விடுங்கள். அதிமுகவின் வேட்பாளரை எதிர்க்க சக்தி இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைப்பதை விட்டுவிட்டு, நேர்மையான முறையில் சந்தியுங்கள் என ஆவேசமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

மேலும், ஸ்டாலினின் 21 மாத ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம் என்றும், மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி உயர்த்தியுள்ளனர் என்றும் திமுக கொடுத்த பெண்களுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் பல்வேறு விஷயங்களைக் கையில் எடுத்து திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும், 21 மாத ஆட்சி காலத்தில் ஸ்டாலின் அவரது மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து முடிசூட்டு விழா நடத்தியுள்ளார். அதுதான் அவர் செய்த சாதனை என்றும் மக்கள் மத்தியில் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

சவால் விட்ட ஈபிஎஸ்

சவால் விட்ட ஈபிஎஸ்

குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் என்றெல்லாம் முதல்வருக்கு சவால் விட்டுப் பேசியது பெரும் எதிர்வினைகளைச் சந்தித்தது. திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் மீசை ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் கால் செருப்புகளுக்கு பாலிஷ் போட்ட பிரஷ்ஷாகவே பயன்பட்டது, எந்த பயனும் இல்லாத அந்த மீசையைத்தான் தமிழக மக்கள் மழுங்கடித்தனர் என கடுமையாக விமர்சித்தார்.

காங். அமோக உறுதி

காங். அமோக உறுதி

இந்நிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 15 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றனர். 66 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆவேசம் வீண்

ஆவேசம் வீண்

திமுகவுக்குப் போட்டியாக ஒவ்வொரு பகுதிக்கும் முன்னாள் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து நூற்றுக்கும் மேற்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்ததோடு பல நாட்கள் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி கட்சிகள் ஆதரவு இருந்தும், ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் போட்டியில் இருந்து விலகியும், அதிமுக வேட்பாளர் பெரும் வித்தியாசத்தோடு பின்தங்கி இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஈபிஎஸ் மேற்கொண்ட ஆவேச பிரச்சாரங்கள் அவருக்கு பெரிய ஆதரவைத் தேடித் தரவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+