ஓபிஎஸ் எஸ்கேப் ஆகிடுறாரே.. கட்சியிலிருந்து தூக்கிடலாமா? விசாரித்த எடப்பாடி.. சீனியர்கள் தந்த ஐடியா
சென்னை: ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை தனது வீட்டில் நடத்தி உள்ளார். இதில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டுள்ளன.
நேற்று முதல்நாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழுவில் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். ஓபிஎஸ் மேடை மீது ஏறிய போதே.. அவரை கீழே இறங்குயா என்று கூறி கடுமையான வசை வார்த்தைகள் மூலம் எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்தனர். அதோடு அவரின் வண்டியை பஞ்சர் செய்து.. அவர் வெளியே செல்லும் போது அவரின் மீது வாட்டர் பாட்டில்களையும் வீசி அவமதிப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவசர அவசரமாக ஓ பன்னீர்செல்வம் நேற்று முதல்நாள் மாலை டெல்லிக்கு விமானம் ஏறினார். பிரதமர் மோடியை சந்திக்கும் விதமாக ஓபிஎஸ் டெல்லி சென்றதாக கூறப்பட்டது.

மீட்டிங்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்ற நிலையில் நேற்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார். நேற்று அவரின் வீட்டில் காலை திடீரென இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் பயணம் குறித்து நீண்ட நேரம் இதில் ஆலோசனை செய்துள்ளனர். பயணத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.

ஓபிஎஸ் ஏன் பயணம்
எடப்பாடி பழனிசாமி இவர்களிடம்.. ஓபிஎஸ் பிளான் என்ன.. டெல்லி பக்கம் சென்றுவிட்டார். டெல்லி அவர் பக்கம் நிற்குமா? பிரதமர் மோடியை அவர் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதோடு தம்பிதுரை மூலமாக டெல்லியில் நடக்கும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் எடப்பாடி தரப்பு பெற்றுள்ளது. அப்போது மோடியை ஓபிஎஸ் தனியாக சந்திக்க வாய்ப்பு இல்லை. அப்படியே சந்தித்தாலும்.. நமக்கு பெரிய பிரஷர் இருக்காது என்றே எடப்பாடி காதுகளுக்கு தகவல் சென்றுள்ளது.
Recommended Video

நீக்கம்
இந்த நிலையில்தான் கட்சி விதிகளை பயன்படுத்தி ஓபிஎஸ் எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார் என்று எடப்பாடியிடம் ஒரு மூத்த நிர்வாகி புலம்பலாக தெரிவித்து இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து போட வேண்டும் என்று கூறி கூறி எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறார். இனியும் விட கூடாது. பொதுவாக பொதுக்குழுவில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால் அவர் அதிர்ஷ்டம் ஏனோ நீதிமன்றம் அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை வைத்து அவர் நீண்ட நாட்கள் தப்பிக்க முடியாது.

காலாவதி
கடந்த டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு முழு பவர் கொடுத்து சிறப்பு தீர்மானத்தை செயற்குழுவில் நிறைவேற்றினோம். ஆனால் இந்த தீர்மானம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. கடந்த பொதுக்குழுவில் இதை நிராகரித்து விட்டோம். இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஒரு வகையில் காலாவதி ஆகிவிட்டது. அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பதவியை மொத்தமாக ரத்து செய்யலாம். இந்த பாயிண்டை வைத்து அவரை முடக்கலாம் என்று நேற்று எடப்பாடி வீட்டில் ஆலோசனை செய்துள்ளனர்.

வழக்கு
இதை எதிர்த்து அவர் வழக்கு தொடுத்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு.. சசிகலா பொதுச்செயலாளராக இருந்தார். அந்த பதவியில் இருந்தே அவரை பொதுக்குழு மூலம் நீக்கினோம். நீதிமன்ற தீர்ப்பும் நமக்கு சாதகமாகவே வந்தது. ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் அதை முன்னுதாரணமாக காட்டி வாதிடலாம் என்று இந்த மீட்டிங்கில் இன்னொரு சீனியர் நம்பிக்கையாக கூறி இருக்கிறார். அதோடு ஓபிஎஸ் இப்படி வீம்பு பிடித்து வழக்கு தொடுத்தால் அவரை கட்சியில் இருந்து நீக்கலாமா என்று எடப்பாடி தரப்பு நேற்று ஆலோசனையில் கேட்டு உள்ளதாம்.

வேண்டாம்
ஆனால் இதை சீனியர்கள் விரும்பவில்லை என்கிறார்கள். அவர் நடந்து கொள்ளும் விதத்திற்கு அவரை கட்சியில் இருந்து நீக்குவதுதான் சரி. ஆனால் அது ஜாதி மோதலை ஏற்படுத்திவிடும். அதோடு அவர் மீது நிர்வாகிகள் பரிதாபம் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். அதனால் அவரே வெளியேறட்டும். இல்லையென்றால் பொதுக்குழுவில் அவரை வெளியேற வைப்போம். நாமாக நீக்க வேண்டாம் என்று சீனியர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications