போச்சு.. போச்சு! செந்தில் பாலாஜியை காரில் ஏற்றி.. மெயின் இடத்துக்கு செல்லும் அமலாக்கத்துறை! திக்திக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை முக்கியமான இடம் ஒன்றிற்கு விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சார்பாக நேற்று காலை 9 மணியில் இருந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். காலையில் தொடங்கிய விசாரணை விடாமல் நடைபெற்று வருகிறது. காலை 8.30 மணிக்கு உணவு முடித்த பின் தொடங்கிய விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இன்றும் அவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணைக்கு பொறுமையாக, அனைத்து கேள்விகளுக்கும் செந்தில் பாலாஜி பதில் சொல்லி வருகிறாராம். செந்தில் பாலாஜியிடம் எஸ் ஆர் நோ கேள்விகள் நேற்று 50 கேட்டுள்ளனர். இதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து கிளை கேள்விகள் 40 கேட்டுள்ளனர். இதற்கு செந்தில் பாலாஜி விரிவாக பதில் அளித்து இருக்கிறார்.
டெல்லி பயணம்: இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை விரும்பும் என்று கூறப்பட்டது. ஆனால் அது தேவையில்லாத நேர விரயத்தை ஏற்படுத்தும். தற்போது 12ம் தேதி வரை மட்டுமே அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி கஸ்டடி கிடைத்துள்ளது.
இப்போது அவர் டெல்லி வரை சென்றால் சரியாக இருக்காது. விசாரணை பாதிக்கப்படும். இதனால் செந்திலோ பாலாஜி தமிழ்நாடு விட்டு அழைத்து செல்லப்பட மாட்டார் என்று கூறப்பட்டது.
கரூர் பயணம்: இந்த நிலையில்தான் டெல்லி செல்லவில்லை என்றாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கரூருக்கு விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கரூரில் செந்தில் பாலாஜி சொந்தமாக வீடு கட்டி வருவதாக தகவல்கள் வருகின்றன.
அங்கே அவருக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும், முதலீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் அமலாக்கத்துறை கடந்த சில வாரங்களாகவே விசாரணை செய்து வருகிறது. செந்தில் பாலாஜி கோர்ட் கஸ்டடியில் இருந்த போது அமலாக்கத்துறை இங்கே சோதனைகளை செய்தது.
இந்த நிலையில்தான் தற்போது செந்தில் பாலாஜியை நேரடியாகவே கரூருக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம். காரில் மாலைக்கு பின் அழைத்து சென்று மறுநாள் கரூரில் வைத்து பல்வேறு இடங்களுக்கு கூட்டி சென்று விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாம்.
கைது நடவடிக்கை: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவரிடம் வாங்கப்படும் வாக்குமூலம் சிலருக்கு குறி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படும் வாய்ப்புகள் கூட உள்ளன. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை தேடும் பணிகள் அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தி விட்டது.
அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications