ஆர்டிகிள் 163, 164.. ஆளுநரால் முதல்வர் பரிந்துரை இன்றி தன்னிச்சையாக அமைச்சரை நீக்க முடியுமா?
சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருப்பது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளை ஆளுநர் மீறியுள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்னர் அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி நீதி வழங்கப்படுவதைத் தடுக்கிறார் என்பதால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு வரலாற்றில் முதலமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறை. ஆளுநர் தன்னிச்சையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு, அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை, இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் விருப்பத்திற்கு மாறாக செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ள நிலையில் ஆளுநரின் அதிகாரங்கள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் ஆளுநருக்கு வழங்கும் உச்சபட்ச அதிகாரங்கள், எல்லைகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆர்டிகிள் 163: இந்திய அரசமைப்பு சட்டத்தின் 163வது பிரிவில் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும். ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி, அல்லது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தனது விருப்புரிமைப்படி செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டிய விஷயமா அல்லது இல்லையா என்ற கேள்வி எழுந்தால், ஆளுநரின் முடிவே இறுதியானது மற்றும் செல்லுபடியாகும். ஆளுநரால் செய்யப்படும் எதையும் அவர் தனது விருப்பப்படி செயல்பட்டிருக்க வேண்டும் அல்லது கூடாது என்ற அடிப்படையில் கேள்விக்குட்படுத்தப்படக்கூடாது என்று
ஆளுநருக்கு அமைச்சர்களால் ஏதேனும் ஆலோசனை வழங்கப்பட்டதா என்ற கேள்வி எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படாது.
ஆர்டிகிள் 164: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 164ன்படி, முதலமைச்சரை ஆளுநர் நியமிக்க வேண்டும், மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். ஆளுநரின் விருப்புரிமைப்படி அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 163 மற்றும் 164வது பிரிவுகள் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையின்றி எந்த ஆளுநரும் ஒரு அமைச்சரை மாநில அமைச்சரவையிலிருந்து நீக்க முடியாது, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரிலேயே அதைச் செய்ய முடியும் என்று மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பிடிடி ஆச்சாரி சில மாதங்களுக்கு முன்பு கேரள ஆளுநர் ஆரிப் கான் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் சிறைத் தண்டனைக்கு உள்ளானால் தவிர, அவர் பெயரில் குற்ற வழக்குகள் இருப்பதாலேயே அமைச்சராகவோ, எம்.எல்.ஏவாகவோ பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லை என ஆளுநரால் சொல்ல முடியாது. நீதிமன்றத்தில் தண்டனை பெற்றால் தான் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்ற விதி உள்ள நிலையில், ஆளுநரின் இன்றைய அறிவிப்பு பெரும் சலசலப்புகளைக் கிளப்பியுள்ளது.
-
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications