அண்ணாமலை பாதயாத்திரை.. இந்தியா டுடே சர்வே கிளப்பும் சந்தேகங்கள்!
சென்னை: மீண்டும் 3ஆவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்பார் என்று இந்தியா டுடே சர்வே சொல்வதில் பல சந்தேகங்கள் உள்ளன என்று கூறி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.ராதாகிருஷ்ணன்.
சமீபத்தில் டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டுடே ஆகிய இரண்டு ஊடகங்களும் மீண்டும் 3வது முறையாக மோடியே பிரதமராக வருவார் என்று கூறியிருந்தன.

அதைப்போல் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணிதான் அதிக இடங்களில் வெற்று பெறும் என்றும் இந்தியா டுடே சர்வேயில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதிமுக சார்பாக ஒபிஎஸ் மகன் ரவீந்திரன் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அதுவும் வழக்கு, நீதிமன்றம் என இழுத்துக் கொண்டிருந்தது.
ஆனால், இந்த முறை அந்த ஒரு இடம்கூட அதிமுகவுக்குக் கிடைக்காது என்று இந்த சர்வேகள் கூறியுள்ளன.

டைம்ஸ் நவ் சர்வேயில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'இந்தியா’ கூட்டணி 39 இடங்களில் 36 சீட்டுகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அதிமுகவுக்கு 2 சீட்டுகள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு 1 சீட்டுதான் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை பாஜக தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் வென்றுவிட்டது. பொன் ராதாகிருஷ்ணன் அந்த வெற்றியை பாஜகவுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
அண்ணாமலை அளவுக்கு அவர் ஆர்ப்பாட்டம் இல்லாத தலைவராக பாஜகவிலிருந்து வருகிறார். சத்தம்போடாமல் ஒரு சீட்டை வென்று காட்டியவர் அவர். ஆனால், அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் தொடங்கி பாத யாத்திரை வரை செய்யாத பிரச்சாரம் இல்லை. அவ்வளவு செய்த பிறகும் பாஜக ஒரு இடத்தில்தான் வெல்லும் என்கிறது டைம்ஸ் நவ்.

அதே நேரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை ஒரு ரோல் செய்துள்ளதாக அந்த சர்வே சொல்கிறது. ரோல் செய்துள்ளது என்றால், அது வாக்குகளாக மாற வேண்டும் இல்லையா? அப்படி மாறாத போது அது என்ன ரோல் என்று புரியாத புதிராக உள்ளது.
அடுத்து இந்தியா டுடே சர்வே. இந்த சர்வே திமுக கூட்டணி 39க்கு 39 என்ற அளவில் வெற்றி பெறும் என்று அடித்துச் சொல்கிறது.
வெற்றி என்னவோ திமுகவுக்குத்தான் என்றாலும் திமுகவின் ஓட்டுச் சதவீதம் இந்தத் தேர்தலில் குறையும் என்கிறது சர்வே. அதாவது 2019இல் 53% இருந்து. இந்த 2024 தேர்தலில் அது 47 ஆகக் குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதிமுக வாக்கு சதவீதம் 2019இல் 35% இருந்தது. அது வரும் 2024 தேர்தலில் 38% ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெற்றிக்கனியை அதிமுக பறிக்காது என்கிறது இந்த சர்வே. ஆளும் கட்சிக்கு எப்போதும் நிலவும் அதிருப்தி காரணம் இந்த வாக்கு சதவீதம் கூடி உள்ளது என்றும் சொல்லப் பட்டுள்ளது.
ஆனால், இந்த சர்வே உண்மையாக இல்லை என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டில் மற்றவர்கள் 38% என்று இந்தியா டுடே சர்வே சொல்லி உள்ளது. அந்த மற்றவர்கள் யார்? என்கிறார்
மேலும் அவர், “திமுகவும் அதிமுகவும் மாறிமாறி 1967இல் இருந்து ஆட்சி செய்து வருகிறார்கள். அப்படி நிலைமை உள்ளபோது இந்தியா டுடே சர்வேயில் அதிமுகவையே புறக்கணித்துவிட்டு என்.டி.ஏ கூட்டணி 15% வாக்குகள் பெறும் என்கிறார்கள். அது எப்படிச் சரியாக இருக்கும்? இது ஒரு சர்வேவா?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்.

“இந்தியா டுடே என்பது மோடி ஆதரவான சானல். அவர் என்ன நினைக்கிறாரோ அதை மக்கள் மனதில் விதைப்பார்கள். இந்தியா டுடே முதலாளி அருண் பூரிக்கு அவரது வகுப்புத் தோழர் ஒரு கடிதமே எழுதி இருக்கிறார். 2002இல் மோடியைப் பெரிய அளவில் விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். ஆனால், ஏன் இப்போது இந்தளவுக்கு மோடி ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள்?” என வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார் அவரது நண்பர்.
பீகார் சம்பந்தமாக இந்தியா டுடே கூறியுள்ள கணிப்பு கட்டாயம் சரியில்லை என்கிறார் இவர். அதைப்போல் அங்கே நிதிஷ்குமாருக்கு மிகப்பெரிய பின்னடைவு காத்திருக்கிறது என்றும் ஆகவே இந்தியா கூட்டணியைவிட்டு அவர் வெளியேறுவதற்கு முன்னதாக இவர்கள் சர்வே எடுத்திருக்கலாம் என்றும் வாதிடுகிறார்.
நிதிஷ்குமாரை பாஜக ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தித்தான் தன் பக்கம் இழுத்துள்ளது. ஒரு வருடம் முன்னால் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என நம்பி வெளியேறியவர், இப்போது மிரட்டலுக்குப் பயந்து மோடி கூட்டணிக்குள் சென்றுள்ளார் என்பதை அந்த மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே அவருக்கு மிகப்பெரிய பின்னடைவு வரும் என்கிறார்.
“மகாராஷ்டிராவில் ஷாருக்கான் அரசியல் ரீதியாக மிரட்டப்பட்டார். அவரது மகனைப் போதைப்பொருள் வழக்கில் வேண்டும் என்றே சிக்க வைத்தார்கள். இதை மும்பை மக்கள் உணர்வார்கள்.
அதைப்போல சரத்பவார் கட்சியை உடைத்தது, சிவ சேனாவை உடைத்தது என்று எவ்வளவு விசயங்களை பாஜக செய்துள்ளது. இடியை வைத்து இணங்க வைப்பது பாஜகவின் சூத்திரமாக உள்ளது.
தமிழ்நாட்டில் அதைத்தான் செய்தார்கள். நீதிமன்றமே விடுவித்த பிறகு பொன்முடி வழக்கை நீதிமன்றம் தானே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது. அதைப்போல்தான் செந்தில் பாலாஜி.
இதுவரை அவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. அவர் இன்னும் விசாரணையில் உள்ளார். இதைப்போல் தங்கம் தென்னரசு, சேகர்பாபு ஆகியோருக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதை எல்லாம் மக்கள் அறிய மாட்டார்களா?
அப்படித்தான் ஜெகன் ரெட்டி. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் ஜாமீனில் உள்ளார். ஒரு முதல்வரே ஜாமினில் இருக்கிறார். அவர் மேல் உள்ள வழக்குகள் ஏன் வேகப்படுத்தப்படவில்லை? அவர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளார். அதானே உண்மை. அப்படித்தான் மக்கள் சொல்கிறார்கள்.
தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதி பாஜகவுக்கு மட்டுமே போகிறது. அது குறித்து வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கே எடுக்காமல் காலம் கடத்துகிறது. அது ஏன்? நெருக்கடிக்காலத்தில் கூட இப்படி நீதிமன்றங்கள் இருந்ததில்லை. அந்தக் காலகட்டத்தில் அஞ்சாமல் பல தீர்ப்புகளை கிருஷ்ணய்யர் கொடுத்தார். அதை நாம் மறந்துவிட முடியாது. அதைவிட நிலைமை மோசமாக இன்று உள்ளது.
இதை எல்லாம் வைத்துத்தான் சொல்கிறேன். இந்தியா டுடே மோடிக்கு ஆதரவாக ஒரு பொதுப்புத்தியில் உள்ள விசயங்களை வைத்து இந்த சர்வேவை எடுத்துள்ளது. இது களத்திற்குச் சென்று எடுத்த சர்வே இல்லை” என்கிறார்.
ஆர்.கே. சொல்லும்படி பார்த்தால், தமிழ்நாட்டில் அது திமுக கூட்டணிதான் வெல்லும் எனச் சொல்லி இருக்கிறது. திமுக மோடியைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சி. அதைப்போல் சில மாதங்கள் முன்னதாக இந்தியா டுடே நாடு முழுவதும் சிறப்பான முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் ஸ்டாலின் தான் இந்தியாவில் நம்பர் 1 என்று கூறி இருந்தது.
மோடி, ஆதரவு என இந்த சர்வேவை புறக்கணித்தால், அந்த ஊடகம் எப்படி சில மாதங்கள் முன்னதாக ஸ்டாலினை முதன்மைப்படுத்தி இருக்கும் என்பது நமக்கு உடனடியாக தோன்றும் சந்தேகமாக உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications