தங்க நகையை அடகு வைத்து வீடு வாங்குவது அல்லது நிலம் வாங்குவது சரியா? மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: தங்க நகையை விற்று நிலம் அல்லது வீடு வாங்குவது என்பது பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.. ஆனால், இந்த முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் சில முக்கியமான சாதக, பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.. நீங்கள் அணிவதற்குப் பயன்படுத்தாத, லாக்கரில் மட்டுமே பூட்டி வைக்கப்பட்டிருக்கும் பழைய நகைகளை விற்று நிலம் வாங்குவது புத்திசாலித்தனம் தான். தங்கம் வளரும் விகிதத்தை விட, நல்ல இடத்தில் அமையும் நிலத்தின் மதிப்பு பல மடங்கு வேகமாக உயரும். அதேநேரம் சில நடைமுறை உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நெட்டிசன் ஒருவர் இன்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில் நண்பர் ஒருவர் புதுசா வீடு கட்டனுமாம் .. "கொஞ்சம் நகையை விற்று கட்டலமா இல்லை அடகு வைத்து விட்டு கட்டலாமா என ஆலோசனை கேட்கிறார்.. நான் சொன்னது குறுகியகாலத்தில் மீட்டுவிடுவது என்றால் அடகு வைக்கலாம் நீண்ட காலம் ஆகும் என்றால்.. விற்கலாம் எப்டியும் 80,90 ஆயிரம் தான் அடுத்த ஓரிரு ஆண்டுகள் தங்கம் விலை இருக்கும் என்றேன்.." என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நிலத்தின் மதிப்பு
இதில் சில பொருளாதார நிபுணர்கள் கூறிய சில கருத்துக்களை பார்க்கும் முன்பு, தங்க நகையின் வளர்ச்சியை பார்ப்போம். 2020ம் ஆண்டு நண்பர் ஒருவர் 3.25 சென்ட் வீட்டு மனைவைய 5.5 லட்சத்திற்கு வாங்கினார். நகையை அடகு வைத்து தான் வாங்கினார். இன்றைக்கு அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. சுமார் 20 லட்சத்திற்கு போகிறது. ஏனெனில் அவர் வாங்கியது கொரோனாவிற்கு முன்பு. அந்த நிலத்தின் அருகே திடீரென வந்த ஆர்டிஓ அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள் காரணமாக நிலத்தின் மதிப்பு எங்கேயோ போய்விட்டது.
சென்னை புறநகரில் வீடு
அதேபோல் இன்னொரு நண்பர் சென்னையின் புறநகர் பகுதியில் வீட்டு கடன் வாங்கியும் தங்க நகையை அடகு வைத்தும் சுமார் 40 லட்சத்திற்கு வீடு வாங்கினார். இன்று அந்த இடத்தில் வீடு வாங்க வேண்டும் என்றால் 50 லட்சம் வேண்டும் என்கிறார்கள். ஒரே வருடத்தில் அங்கு நிலத்தின் மதிப்பு சதுர அடிக்கு 1000 ரூபாய் ஏறி இருந்தது. அதுஜிஎஸ்டி சாலைக்கு மிக அருகில் உள்ள இடம் ஆகும். எனவே அதிகப்படியான நபர்கள் ஒரே நேரத்தில் வீடு வாங்க விரும்பியதால் மதிப்பு சர்ரென ஏறியது.
எல்லாருக்கும் வாய்ப்பு இல்லை
நிலத்தின் மதிப்பு அங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனினும் எல்லா இடங்களிலும் இப்படி நடைபெற வாய்ப்புகள் இல்லை. அதேநேரம் இடத்தின் மதிப்பு நன்கு உயரும். பல வருடம் காத்திருந்து பணம் பார்க்க வேண்டும் என்று நினைப்போருக்கு இடம் வாங்கிப்போடுவது சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரம் தங்க நகையை அடகு வைத்து வாங்குவோர் சில பிரச்சனைளையும் கவனிக்க வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
நகைக்கடன் எளிது
ஏனெனில் சமீபகாலமாக, வங்கிகளில் நகைக்கடன் பெறுவது எளிதாகிவிட்டதால், பலரும் தங்களது பாரம்பரிய நகைகளை அடகு வைத்து நிலம் அல்லது வீடுகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து 'வட்டிக்கு மேல் வட்டி'. சாதாரண வங்கிக் கடனைப் போல இது தவணை முறையில் கட்டப்படுவதில்லை. பெரும்பாலும் ஓராண்டுக்குள் அசலையும் வட்டியையும் கட்டியாக வேண்டும்.
சிக்கலில் மாட்டுகிறார்கள்
"நிலம் வாங்கிய கையோடு அதை வித்து நகையை மீட்டுடலாம்" என்று நினைப்பவர்கள் தான் அதிகம் சிக்கலில் மாட்டுகிறார்கள். நிலம் என்பது தங்கம் போல நினைத்த நேரத்தில் விற்கக்கூடிய பொருளல்ல. ஒருவேளை நிலம் விற்பனையாக தாமதமானால், அங்கே வட்டிக்கு வட்டி ஏறி, கடைசியில் நகையை ஏலத்திற்கு விடும் சூழல் உருவாகிறது.
நிம்மதி இல்லை
ஒரு முதியவர் கூறியவற்றை பாருங்கள்.. "மூணு வருஷத்துக்கு முன்னாடி பொண்ணு நகையை அடகு வச்சு 5 லட்சம் திரட்டி ஒரு வீட்டு மனை வாங்கினேன். ஆனால் இன்னைக்கு அந்த மனையை விற்க முடியல, வட்டியும் கட்ட முடியல. கையில இருந்த நகையும் பேங்குக்கு போயிடுச்சு, நிலமும் வில்லங்கத்துல நிக்குது. மொத்தத்துல நிம்மதி போச்சுங்க!" என்று புலம்புகிறார்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 விஷயங்கள்:
நீங்கள் வாங்கும் நிலத்தின் மதிப்பு ஆண்டுக்கு 20% உயர்கிறது என்றால், நீங்கள் கட்டும் வட்டி 10% ஆக இருந்தால் மட்டுமே அது லாபம். வட்டி விகிதமும் ஏறி, நிலத்தின் மதிப்பும் ஏறவில்லை என்றால் அது மிகப்பெரிய நஷ்டமாக மாறிவிடும். வட்டி கட்ட மாத வருமானம் கையில் இருக்கிறதா? அல்லது நிலத்தை விற்றுத்தான் கட்ட வேண்டுமா? நிலத்தை விற்றுத்தான் கட்ட வேண்டும் என்றால் இது மிகவும் ஆபத்தான முடிவாகிவிடும்.
நிலத்தின் வில்லங்கம்
அவசர அவசரமாக நகையை அடகு வைத்துப் பணத்தைத் திரட்டுபவர்கள், நிலத்தின் ஆவணங்களைச் சரியாகச் சரிபார்ப்பதில்லை. "கையில காசு இருக்கு, நிலம் கைவிட்டுப் போயிடும்" என்ற பயத்தில் தவறான நிலத்தை வாங்கிவிட்டுப் பின்னால் தவிப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
தெளிவான திட்டமிடல் வேண்டும்
தங்கம் என்பது பெண்களின் பாதுகாப்பு, நிலம் என்பது குடும்பத்தின் வளர்ச்சி. இந்த இரண்டிற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தில், தெளிவான திட்டமிடல் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் ஆகும். நகையை விற்பது என்பது ஒருமுறை நடக்கும் இழப்பு, ஆனால் அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமல் தவிப்பது என்பது மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒருவரைச் சிதைத்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
நகையை அடகு வைத்து நிலம் வாங்குவது சரியா
எனவே நகையை அடகு வைத்து நிலம் வாங்கும் முன், "உங்களால் அந்த நகையைத் திருப்பி மீட்க முடியுமா?" என்ற கேள்வியை மட்டும் ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். பதில் 'ஆம்' என்றால் மட்டும் அந்த முடிவை எடுங்கள். அப்படி நகையை மீட்க முடியாது. பலவருடம் வட்டி தான் கட்ட போகிறீர்கள் என்றால் ஒருமுறை இரு முறை யோசித்து முடிவெடுங்கள்.
-
வெனிசுலாவிலிருந்து.. அமெரிக்காவுக்கு வந்த தங்க கட்டிகள்! மொத்த மதிப்பு பல நூறு கோடிகள்! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?












Click it and Unblock the Notifications