ஆதார் அட்டை இருக்கா? கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருளை வாங்க முடியாதா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது என்றும் சோஷியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு விளக்கம் ஒன்றினை தந்துள்ளது.
இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான அடையாள அட்டையாகிவிட்டது.. தற்போது மொத்தம் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டையை வைத்திருக்கிறார்கள்.. எனவே, ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது.

புதுப்பிக்க வேண்டும்: ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது போன்ற அரசின் பல்வேறு மானியங்களை பெற முடியும்.. அரசின் நலத்திட்டங்களையும், சேவைகளையும் உடனுக்குடன் பெற முடியும். 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இதுவரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டே வருகிறார்கள்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் அட்டை ஆவணங்களை ஒரு நபர் புதுப்பிக்கவில்லை என்றால், myAadhaar என்ற ஆதார் போர்ட்டலுக்குள் நுழைந்து ரூ.25 அல்லது இயற்பியல் ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி, அவர்களின் அடையாள மற்றும் முகவரி சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்.
புதிய புரளி: அந்தவகையில், செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லையானால், ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள் என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.. இந்த வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த வதந்தி குறித்து தமிழக உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.. அந்த அறிக்கையில், "ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
பொய்யான தகவல்: கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications