ரிசல்ட் வந்ததும்! வெடிக்கும் பூகம்பம்.. ஸ்டாலின் கையில் மாஸ்டர்பிளான்.. தேசியம் திரும்பி பார்க்கும்
சென்னை: ஜூன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக சில பூகம்பங்கள் வெடிக்கலாம்.. அது தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் சாதகமாக முடியலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது., 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர் போல இனி தமிழ்நாடு ரிசல்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதுவும் முதல் கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டிற்கு வாக்கு பதிவு முடிந்துவிட்டது.

இதனால் தமிழ்நாடு ரிசல்ட் வரும் வரை.. இப்படி அடித்து கொளுத்தும் வெயிலை ரசித்தபடி தாங்கள் அளித்த வாக்கிற்கான முடிவை எண்ணி காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. சினிமாவில் பிரேக்கில் விடப்படும் இண்டர்வெல்லில் போடப்படும் டிரைலர்களை வேறு வழியில்லாமல்.. பார்த்து.. கடைசியில் அதையும் ரசிப்பதை போல.. மற்ற மாநில தேர்தல்களில் நடக்கும் கூத்துக்களை கொண்டாடுவதை தவிர இப்போதைக்கு தமிழர்களுக்கு வேறு எண்டர்டெயின்மெண்ட் இல்லை.
ஆனால் கவலை வேண்டாம்.. ஜூன் 4ம் தேதிக்கு பின் தமிழ்நாட்டில் கண்டிப்பாக பல அரசியல் என்டர்டெயின்மெண்ட்கள் நடக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதுவும் ஆளும் கட்சியான திமுக கேம்பில் சில அதிரி புதிரி சம்பவங்கள் நடக்க போகின்றன என்று தகவல்கள் வந்துள்ளன.
திமுக தேர்தல் வேலை: 2024 லோக்சபா தேர்தலில் பின்வரும் விஷயங்கள் தங்களுக்கு கை கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கருதுகிறாராம்.
1. கோவையில் அமைச்சர் டிஆர்பி ராஜா செய்த பிரச்சராம் திமுகவிற்கு பெரிய பலன் கொடுத்துள்ளது. அவரின் திட்டமிடல் சிறப்பாக இருந்துள்ளதாம்.
2, எம்பி அப்துல்லா கரூரில் மேற்கொண்ட பணிகளும் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுத்துள்ளது என்கிறார்கள்.
3. இது போக அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கே என் நேரு ஆகியோர் சிறப்பாக செயலாற்றியதாக மேலே ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
4. எம்பி கனிமொழி தூத்துக்குடி தாண்டி மற்ற தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்தது பற்றிய குட் ரிப்போர்ட்டும் தலைமைக்கு சென்றுள்ளதாம்.
சில புகார்கள்; அதே சமயம் சில அமைச்சர்கள் பற்றிய புகார்கள் மேலிடத்திற்கு சென்றுள்ளது. அதாவது 3 அமைச்சர்கள் சரியாக வேலை செய்யவில்லை. தங்கள் தொகுதி, பொறுப்பு மாவட்டங்களில் பணிகளை செய்யவில்லை என்று புகார் சென்றுள்ளதாம். முக்கியமாக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் பெரிதாக சில அமைச்சர்கள் பணிகளை செய்ய முடியவில்லை என்று புகார்கள் சென்றுள்ளதாம்.
இந்த முறை பெரிதாக எங்கும் பணம் கொடுக்கப்படவில்லை. இதை ஒரு முன்னோட்டமாக திமுக செய்துள்ளது. இதன் பலன் எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்ததும்.. ஸ்டாலின் முக்கியமான சில பணிகளை செய்ய போகிறாராம். இந்தியா கூட்டணி வெல்லும் என்று ஸ்டாலின் தீவிரமாக நம்புகிறார். முக்கியமாக 200+ இடங்களை இந்தியா கூட்டணி வெல்லும். திரிணாமூல், பிஜு ஜனதா தளம் சேர்த்து கண்டிப்பாக ஆட்சி அமைக்க முடியும் என்று ஸ்டாலின் நம்புகிறாராம். ஒருவேளை இந்தியா கூட்டணி வென்றால்.. அதில் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு 3 பெரிய துறைகளை வாங்க வேண்டும் என்று திட்டம் உள்ளதாம்.
நெடுஞ்சாலை துறை, விமான போக்குவரத்து துறை, நீதித்துறையை வாங்க ஸ்டாலின் தீவிர திட்டத்தில் இருக்கிறாராம். நிதித்துறை வாங்கினால் ராஜ்ய சபா வழியாக ஒரு பொருளாதார புள்ளியை அமைக்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு உள்ளதாம் (அந்த பொருளாதார புள்ளி பிரதமர் ரேஸிலும் இருக்கிறார்).
இது போக தமிழ்நாட்டில் விமானத்துறை தொடர்ந்து காட்டும் பாராபட்சங்களுக்கு முடிவுக்கட்டும் விதமாக விமானத்துறையை வாங்கும் எண்ணமும் ஸ்டாலினிடம் இருக்கிறதாம். அமைச்சர்களாக யாரை பரிந்துரைக்கலாம் என்ற திட்டமும் ஸ்டாலினுடன் இருக்கிறதாம். பொதுவாகவே காங்கிரஸ் ஆட்சியில் திமுகவிற்கு பலமான அமைச்சரவை கிடைக்கும். அதே போல இந்த முறையும் வாங்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளதாம்.












Click it and Unblock the Notifications