தலித்துகளின் நகரமா ‘மெட்ராஸ்’? இது யாருக்குச் சொந்தம்? புதிய விளக்கம் தந்த ரஞ்சித்!
சென்னை: வரலாற்றில் 385 ஆண்டுகள் பழமையான சென்னை நகரம் பற்றியும் அதனுடன் தனது உறவு எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமானது என்பது பற்றியும் இயக்குநர் ரஞ்சித் பேசியுள்ளார்.
'மெட்ராஸ்’ என்றதும் பலருக்குப் பல விசயங்கள் நினைவுக்கு வரும். இன்றைய இளம் தலைமுறைக்கு அந்தப் பெயரை சொன்னவுடன் கார்த்தி நடித்த திரைப்படம் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக நீதி கேட்டு பேரணி நடத்திய ரஞ்சித், 'மெட்ராஸ் என்றால் நாங்கள்தான். எங்களை மீறி யாரும் இங்கே ஒன்று செய்ய முடியாது’ என்று பேசி இருந்தார். உடனே அதைப் பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்வினைகளை வைத்தனர். இப்போது மெட்ராஸ் என்ற பழமையான நகரம் தனது 385 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது. இந்த வேளையில் இயக்குநர் ரஞ்சித் தனது மெட்ராஸ் உறவு பற்றியும் அவர் முன்வைக்கும் அரசியல் பற்றியும் மனம் திறந்து சில கருத்துகளைப் பேசி இருக்கிறார்.

குறிப்பாக அவர் ஏன் மெட்ராசை தங்களின் ஊர் என்று சொந்தம் கொண்டாடினார் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். ரஞ்சித் பேசும்போது, “சமீபத்தில் கூட ஒரு கூட்டத்தில் பேசிய போது 'மெட்ராஸ் என்றால் அது நாங்கள்தான்’ என்று பேசி இருந்தேன். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. யார் என்ன சொன்னாலும், மெட்ராஸ் என்பது உழைக்கும் மக்களின் அடையாளம்தான். அவர்கள்தான் இந்த நகரத்தைக் கட்டி எழுப்பினார்கள்.
ஆங்கில ஆட்சிக் காலத்தில் உள்ள வரைபடங்களை நீங்கள் இப்போது கூட எடுத்து ஆய்வு செய்தால், அதில் உள்ள உண்மை புரியும். பிளாக் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, பெரிய மேடு, ஐஸ் ஹவுஸ், அடையாறு, ஆல்காட் என மிகப்பெரிய ஏரியாவே உழைக்கும் மக்களின் பகுதிகள்தான். இந்த வழிப்பாதையை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். அதனால்தான் சொல்கிறேன், 'எங்க ஊரு மெட்ராசு நாங்கதான் அட்ரஸு’ என்கிறேன். இதற்குள் தலித் மக்கள் மட்டும் இல்லை. தலித் அல்லாதவர்களும் இருக்கிறார்கள். இதை நான் சாதி சார்ந்து சொல்லவில்லை. பலர் அப்படிப் புரிந்து கொள்கிறார்கள்.
இதை சொல்லும்போதே சிலர் என்னை விமர்சிப்பார்கள். நானே மெட்ராஸ் கிடையாது. பக்கத்தில் உள்ள புறநகரிலிருந்துதான் மெட்ராசுக்கு வந்தேன் என்று சொல்வார்கள். என் கிராமம் மெட்ராசை விட்டு நூறு மைல் தொலைவில் இல்லை. அது மெட்ராசுக்கு பக்கத்தில்தான் உள்ளது. அதற்காகவே நாங்கள் மெட்ராசை சொந்தம் கொண்டாடுகிறோம். அதை மையமாக வைத்துத்தான் என் படங்களை எடுக்கிறேன். என் படங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ள ஒரு வளையம் போன்றது. அவை தனித்தனியானவை அல்ல. இதையே ஏன் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிலர் கேட்கலாம். வேறு ஏதாவது எடுக்கலாமே என்பார்கள். நான் ஏன் வேறு ஒன்றை எடுக்க வேண்டும். எனக்கு எது தெரியுமோ அதைத்தான் எடுப்பேன்.
எனது குரல் இரண்டு தளங்களில் எதிரொலிக்கிறது. ஒன்று சமூகத் தளம், மற்றொன்று திரை தளம். இந்தியாவில் சினிமாவும் சமூகமும் ஒன்றிப்போய் உள்ளது. அவை தனித்தனியாக இல்லை. நான் என் சினிமாவில் சாதியைப் பற்றிப் பேசவே இல்லை. அட்டகத்தியில் கூட பின்புலமாகத்தான் இருக்கும். 'மெட்ராஸ்’ படத்தில் அரசியலைத்தான் சொல்லி இருக்கிறேன். 'கபாலி’யில் வரும் கடைசி டயலாக் கூட மலேசியத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தித்தான் பேசி இருந்தேன்.
கால் மேல கால் போடுவேன்டா என்ற டயலாக் அடிமைப்படுத்தி வைத்துள்ள சீனர்களைப் பார்த்து தமிழர்கள் சார்பாக ரஜினி பேசியது. அதை இங்கே தலித் மக்களோடு சேர்த்துப் புரிந்து கொண்டார்கள். 'காலா’வில் கூட சாதி இல்லை. அதிகார வர்க்கத்தைப் பற்றிய படம்தான். அதைச் சாதிய படமாகப் பார்த்தார்கள். நான் வெளிப்படையாகச் சாதியைப் பற்றி பேசியது 'நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில்தான். நான் சினிமாவுக்கு வெளியே மேடைகளில்தான் சாதி பற்றி பேசுகிறேன். அந்தப் பேச்சுகள் என் படத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சினிமா ரசிகர்கள் என் பேச்சுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சிக்கிறார்கள்” என்கிறார்.
மேலும் சினிமா மூலம் முன்வைக்கப்படும் அரசியலின் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் அரசியல் கட்சியுடன் சேர்ந்து பயணிக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்த ரஞ்சித், “சின்ன வயதிலிருந்தே நான் அரசியலில்தான் இருக்கிறேன். முதன் முறையாக ஓட்டுப் போடும்போதுகூட ஒரு கட்சி சார்பாகவே இருந்துள்ளேன். ஏதோ இப்போதுதான் நான் சினிமா மூலம் அரசியல் பேசவில்லை. ஒரு அமைப்பாக அரசியல் ரீதியாக இயக்கும் திட்டம் இப்போது இல்லை. எனக்குள் சில கனவு சினிமா எடுக்கும் வேண்டிய திட்டங்கள் உள்ளன. அதை எடுக்க வேண்டும். அதுவரை அரசியல் பற்றிப் பேசுவேன். களச் செயல்பாடு என்பதை நிறுத்த மாட்டேன்” என்று கூறி இருக்கிறார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications