Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா தேர்தல் தந்த சிக்னல்.. தமிழ்நாட்டிலும் விரிவாக்கப்படும் மகளிர் உரிமைத்தொகை? முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 16, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 10 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா: பாஜக கூட்டணி - பாஜக 132 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 31, ஷிண்டே சிவசேனா - 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ள. பாஜக கூட்டணி மொத்தமாக 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாஜக கூட்டணிக்கு தற்போது பெண்களுக்கு கொடுத்து வரும் மாதம் 1500 ரூபாய் திட்டம் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எங்கு பார்த்தாலும் இந்த திட்டம் தொடர்பான விளம்பரங்கள் மகாராஷ்டிராவை அலங்கரித்தன.

election results 2024 maharashtra assembly election 2024 jharkhand assembly election 2024 by poll election 2024

பல மாநிலங்களில் திமுக ஸ்டைல் தேர்தல் அறிக்கை காங்கிரசுக்கு உதவின. தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் இதற்கு உதாரணம். இதை சமாளிக்கவே தேர்தலுக்கு முன்பாகவே மகாராஷ்டிராவில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை பாஜக கூட்டணி அங்கே கொண்டு வந்தது. ஆட்சியை இழக்க கூடாது என்பதால் கடந்த சில மாதங்களாக பாஜக கூட்டணியும் அங்கே பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் திட்டத்தை கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் இலவசத்தை எதிர்க்கும் பாஜக, மகாராஷ்டிராவில் 1500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தைதான் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பிரம்மாஸ்திரமாக பார்த்தது. அந்த திட்டம் தற்போது பாஜக கூட்டணிக்கு தேர்தல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் விரிவாக்கம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் ஒன்றரை வருடத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்று பார்க்கலாம்.

ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று கூறப்படுகிறது .

வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில வாரங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் விளக்கம்: ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 'மகளிர் உரிமைத்தொகை' என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமை தொகை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விபத்துப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில வாரங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019ல் 27 மாவட்டங்களில் நடந்த தேர்தல் நடந்தது. தேர்வான நபர்களின் பதவி காலம் வரும் டிசம்பருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல்: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+