காலியாகிறதா மய்யம்? கோவையில் கமல் போட்ட ஸ்கெட்ச் சொதப்பியது எப்படி? அதிர வைக்கும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், அக்கட்சியின் உள்வட்டத்தில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.. குறிப்பாக விருப்ப மனு கட்டணம் திரும்ப வழங்கப்படாதது மற்றும் கோவையில் முக்கிய நிர்வாகி விலகல் போன்ற நிகழ்வுகள் கட்சித் தலைமையைத் திகைக்க வைத்துள்ளதாக தெரிகிறது.. இந்த சூழலில், நிர்வாகிகளின் அதிருப்தி மற்றும் வெளியேற்றம் என அடுத்தடுத்த பரபரப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் சூழலில் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

MNM Politics Kamal Haasan Party News Tamil Nadu Political Drama

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் மய்யத்திற்குத் தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.. இந்த அரசியல் நகர்வு கட்சியின் உள்வட்டத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

குறிப்பாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள், நேர்காணலுக்கு அழைப்பார்கள் என்று காத்திருந்தனர். ஆனால், திடீரென இந்த தேர்தலில் போட்டியில்லை என்றும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்றும் கமல் அறிவித்துவிட்டார்.. இதனால் விருப்ப மனு அளித்தவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகள், தங்களின் விருப்ப மனுக்கான 50,000ஐ திருப்பித்தரவேண்டும் என கோரிக்கை வைத்ததும், பெரும் சலசலப்பை உண்டுபண்ணியது..

இதையடுத்து, தேர்தல் களத்தில் போட்டியிட விரும்பி விருப்ப மனு அளித்த நிர்வாகிகளுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. இருந்தாலும், இந்தத் தொகை இன்னும் பலருக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்ற புகார்கள் ஆங்காங்கே வெடித்துள்ளன. இது குறித்த அதிருப்தி நிர்வாகிகள் மத்தியில் மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது..

தள்ளாடுதா மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த பல்வேறு பேச்சுகள் நிலவி வரும் சூழலில், கட்சிக்குத் தொகுதிகள் இல்லாத நிலை தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.. விருப்ப மனு கட்டண விவகாரம் மற்றும் நிர்வாகிகளின் வெளியேற்றம் போன்ற தற்போதைய நிகழ்வுகளைக் கட்சித் தலைமை எப்படிக் கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், தனது கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளாராம்.. பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவிடம் அடகு?

அதேபோல், திமுக கூட்டணியில் இணைந்து செயல்படும் முடிவுக்குப் பிறகு, ஒரு தரப்பினர் அமைதியான முறையில் கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்காளம்.. "திமுகவிடம் கட்சியை அடகு வைத்துவிட்டதாக" வெளியேறும் நிர்வாகிகள் சிலர், காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது..

மேற்கண்ட நிகழ்வுகளைப் பார்க்கும்போது, மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்த பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் கட்சிக்குள் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் சீட் ஒதுக்கப்படாத நிலை, விருப்ப மனு கட்டண விவகாரம் மற்றும் சில நிர்வாகிகளின் விலகல் போன்றவை ஒரே நேரத்தில் வெளிப்படுவது, கட்சியின் அமைப்பு மற்றும் செயற்பாட்டு ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கமலின் ராஜதந்திரம் முடிவு

கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த தேர்தல் முடிவை, பாசிட்டிவ் விதமாகவும் நாம் அணுக வேண்டியிருக்கிறது.. காரணம், அரசியல் களத்தில் சமரசங்களும், வியூக மாற்றங்களும் தவிர்க்க முடியாதவை. கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த முடிவு, நீண்ட கால அரசியல் பயணத்திற்கான ஒரு தற்காலிக நிதானமாகவோ அல்லது தனது இயக்கத்தின் வாக்கு வங்கியைச் சிதறவிடாமல் பாதுகாக்கும் ஒரு ராஜதந்திரமாகவோ இருக்கலாம்.

தேர்தல் வெற்றிகளை தாண்டி, ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கும் ஒரு தலைவர், களத்தின் எதார்த்தத்தை உணர்ந்து எடுக்கும் இத்தகைய முடிவுகள் எதிர்காலத்தில் அவருக்குப் புதிய கதவுகளைத் திறக்கலாம்...

அதனால் தற்போது எழுந்துள்ளதாக சொல்லப்படும் சிறுசிறு சலசலப்புகளை சரிசெய்து, நிர்வாகிகளின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுத்தால், மக்கள் நீதி மய்யம் இன்னும் வலுவான சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஒரு தொலைநோக்குப் பார்வையில் இந்த நகர்வு சரிதானா என்பதை எதிர்வரும் காலமும் வாக்காளர்களுமே தீர்மானிப்பார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+