Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சும்மா இருக்க மாட்டீயா.. ஒரு வாட்டர் பாட்டிலும்! அமித் ஷா போட்ட ஆர்டரும்! அதிமுகவில் இணையும் ஓபிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். சுமார் 20 நிமிடங்கள் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அமித் ஷா அழைப்பின் பெயரில் ஓபிஎஸ் மீட்டிங் நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும் இடையிலான கூட்டணி பிணைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது கண்கூடாகத் தெரிய தொடங்கி உள்ளது. இந்த பயணம் காரணமாக எடப்பாடி பழனிசாமி - பாஜக இடையே நெருக்கம் ஏற்பட்டு உள்ளது.

BJP O Panneerselvam

இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

தனிக்கட்சி இல்லை - அமித் ஷா போட்ட ஆர்டர்

டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டிசம்பர் 15ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் அமித் ஷா ஓ பன்னீர்செல்வத்திடம் முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் அதிமுகவில் இணைய ஏற்பாடு செய்கிறேன். உங்களை மட்டுமின்றி சசிகலாவும் அதிமுகவில் இணைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

அதனால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஆதரவாளர்களிடம் அதற்கான ஆலோசனைகளை பெறுங்கள் என்று அமித் ஷா ஓ பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தெரிகிறது.

அதற்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக கூட நீடிக்கலாம். ஆனால் முதல்வர் வேட்பாளராக இருப்பது சரியல்ல. அதை மாற்ற வேண்டும். என்னுடைய ஒரே கோரிக்கை அதுதான். என் மீது பொதுக்குழுவில் வாட்டர் பாட்டில் எல்லாம் வீசி (அந்த நேரம் எடப்பாடி பாட்டில் வீசிய நிர்வாகியை கோபமாக - சும்மா இருக்க மாட்டீயா? என்று கூறி பிரபலம்) அசிங்கம் செய்தனர். அதை மீறி கட்சிக்குள் செல்ல வேண்டும் என்றால்.. எடப்பாடியும் இறங்கி வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

அதற்கு ஓ பன்னீர்செல்வம், கட்சியில் நிறைய மாற்றங்கள் வரும்.. நீங்கள் ஒற்றுமையாக இருப்பதே இப்போது அவசியம். தென் மண்டலத்தில் வெல்ல இதுவே வழிவகுக்கும். அதனால் மற்றதை பின்னர் பேசலாம் என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது. இதனால் விரைவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓ பன்னீர்செல்வம் சொன்னது என்ன?

இந்த சந்திப்பு தொடர்பாக ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை கழகமாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன்.

பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தேன். தொண்டர்களின் எண்ணத்தையும் அமித்ஷாவிடம் கூறினேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்பதையே அமித்ஷாவுடன் வலியுறுத்தினேன். எம்ஜிஆர் தொண்டர்களின் இயக்கமான அதிமுக எப்போதும் பிளவுபடாது. ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

அதேபோல் தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவில்லை. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் அவருடன் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+