"அல்டிமேட் பிளான்".. எடப்பாடி அஸ்திரத்தை பிடித்து "திருப்பி" அனுப்பும் ஓபிஎஸ்.. மொத்தமும் முடக்கம்?
சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்த ஓ பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.
அதாவது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.
ஓ பன்னீர்செல்வமும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக மனு தாக்கல் செய்து இருக்கிறார். இன்னொரு பக்கம் அதிமுகவில் துணை எதிர்க்கட்சி தலைவர் மாற்றப்பட்டதை இன்னும் சபாநாயகரும் அங்கீகரிக்கவில்லை.

என்ன நடக்கும்?
இதன் காரணமாக இன்னும் பேப்பர்படி ஓ பன்னீர்செல்வம்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவர் இன்னும் கட்சியில் நீடிக்கிறார். இதே லாஜிக்படி பார்த்தால் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அதுவும் செல்லாது. எனவே இப்போதும் எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். கட்சியில் இப்போது வரை எதுவும் "சட்டப்படி" மாற்றம் அடையவே இல்லை.

குழப்பம்
இந்த நிலையில்தான் அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சட்டப்படி இன்னும் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்பதால் அதை பயன்படுத்தி புதிய நிர்வாகிகளை ஓ பன்னீர்செல்வம் நியமிக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் சமீபத்தில் புதிதாக 14 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல முக்கியமான மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

புதிய நிர்வாகிகள்
தற்போது அதன்படியே புதிய மாவட்ட செயலாளர்கள் பலரை ஓபிஎஸ் நியமனம் செய்வார் என்று கூறப்படுகிறது. அதேபோல் தனது சார்பாக புதிய எதிர்க்கட்சி துணை தலைவரை தேர்வு செய்து, அதை சபாநாயகருக்கு அனுப்பும் திட்டத்திலும் ஓபிஎஸ் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த ஒருவரை துணை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து, அவர்கள் குழுவிற்கு உள்ளேயே கலகம் ஏற்படுத்தும் திட்டத்தில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

வேறு நிர்வாகிகள்
அதேபோல் அதிமுகவில் புதிய கொறடா, புதிய தலைமை நிலைய செயலாளர், தலைமை கழக உறுப்பினர்களையும் விரைவில் ஓ பன்னீர்செல்வம் நியமிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வம் இப்படி புதிய நிர்வாகிகளை நியமித்தால் அது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இன்றி சட்டப்படி செல்லுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு.. இந்த நியமனங்களை செல்ல வைக்கும் திட்டத்திலேயே இல்லை என்கிறார்கள்.

நியமனம் ஏன்
ஆம் இந்த நியமனங்களை மேற்கொள்வதே கட்சியில் இரண்டு குழு உள்ளது என்பதை நிரூபிக்கவே. அபப்டி செய்தால் சின்னம் தானாக முடங்கும். தேர்தல் ஆணையம் இரண்டையும் அதிமுக அணிகளாக பிரித்து அங்கீகரிக்கும். அப்படியென்றால் ஓபிஎஸ் கை ஓங்கும் என்ற திட்டத்தில்தான இந்த நியமனங்களை ஓ பன்னீர்செல்வம் செய்ய போவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு நியமனங்களை செய்து.. ஓபிஎஸ்ஸை ஒதுக்கி வைத்தார். இப்போது அதே அஸ்திரத்தை ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிராக பயன்படுத்த உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications