Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்னிங் தந்த கருத்து கணிப்பு! லீடில் வரும் இந்தியா கூட்டணி! முன்கூட்டியே தேர்தலை நடத்த மோடி முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் குவித்த பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன.

2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

Is PM Modi planning to go for early election? What are BJP and NDA planning in Lok Sabha election 2024?

கருத்து கணிப்பு 1 : உதாரணமாக டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்து கணிப்பு 2 : இன்னொரு பக்கம் PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இன்னொரு கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது

மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

கருத்து கணிப்பு 3 : ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,

தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்

தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில்வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.

மொத்தமாக எத்தனை: லோக்சபா கருத்துக்கணிப்பு மொத்த இடங்கள் : 543, மெஜாரிட்டி பெற 272

இந்தியா கூட்டணி - 243
பாஜகவின் என்டிஏ கூட்டணி - 255
மற்றவை - 45

ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எல்லாமே அப்படியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம் தேர்தலுக்கு இன்னும் பல காலம் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்க என்ன வேண்டுமென்றாலும் அரசியல் களத்தில் நடக்கலாம்.

6 விஷயங்கள்: இப்படி லோக்சபா தேர்தல் குவித்த பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவிற்கு 6 விஷயங்கள் வரும் லோக்சபா தேர்தலில் எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

1. சீக்கிய சமூகத்தினர் முன்புபோல பாஜகவிற்கு வாக்களிக்க வாய்ப்பு குறைவு.
2. SC & ST சமூகத்தினர் 2019 இல் செய்தது போல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வாய்ப்பு குறைவு.
3. விவசாயத்தை நம்பி வாழ்வாதாரம் கொண்ட விவசாயிகள் 2019ல் செய்தது போல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வாய்ப்பில்லை.
4. மோடி ஜி/பாஜக மீது இளைஞர்கள் சிறிது அதிருப்தி அடைந்துள்ளனர்
5. NRC+CAA பிரச்சினை இல்லாத காரணத்தால் 2024 இல் மத பிளவு குறைவாக உள்ளது
6. பாலகோட் தாக்குதல் போன்ற உணர்ச்சிக் காரணி இந்த தேர்தலில் காணவில்லை.

இந்த 6 விஷயங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி: லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ந் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

எதிர்பக்கம் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, ஆம்ஆத்மி, திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி இணைந்து வலிமை அடைந்து வருகின்றன.

மோடி திட்டம்: லோக்சபா தேர்தல் குவித்த பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதன்படி இந்த வருடமே.. இறுதியில் தேர்தலை நடத்த அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் அதாவது மே மாதம் தேர்தலை நடத்த மோடி திட்டமிட்டு வருகிறாராம். இதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. இந்தியா கூட்டணி மேலும் வலிமைடையாமல் தடுக்க முடியும்.

2. இந்தியா கூட்டணி முறையாக திட்டங்களை வகுக்கும் முன் தேர்தலை நடத்தலாம்.

3. கள நிலவரம் எதிரணிக்கு ஆதரவாக மாறும் முன் தேர்தலை சந்திக்க முடியும் உள்ளிட்ட காரணங்களால் அமைச்சரவையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க மோடி திட்டமிட்டு வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+