ஆப்சென்ட் ஆகும் ராமதாஸ்.. நேரடியாக களமிறங்கும் அமித் ஷா.. குறிக்கப்பட்ட 2 இடங்கள்.. சுக்குநூறா ஆகுதே
சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடக்கும் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் முக்கியமான சில திட்டங்களை பாஜக வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார் அமித் ஷா. தென்மாவட்டங்களை உள்ளடக்கி மதுரையில் ஒரு பொதுக்கூட்டமும், வட தமிழகத்தை உள்ளடக்கி சென்னையில் ஒரு பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்ய அமித் ஷா தரப்பில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னை பொதுக்கூட்டத்தில் அமித் ஷாவுடன் மேடையில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் இருக்க வேண்டும் என்று தைலாபுரம் தோட்டத்துக்கு தமிழக பாஜகவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அன்புமணி நிச்சயம் கலந்துகொள்வார். ராமதாஸ் கலந்து கொள்வது இன்னும் முடிவாகவில்லையாம். உடல்நிலையை பொறுத்து ராமதாஸ் கலந்து கொள்வது முடிவு செய்யப்படும் என்பதாக தமிழக பாஜகவுக்கு பதில் அனுப்பியுள்ளது தோட்டம்.
பாஜக - பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை ஒன்றாக சந்திக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திக்கும் என்று பாமக அறிவித்துள்ளது.
குழப்பம்: கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை எல்லாம் மாலை பாமக - அதிமுக கூட்டணியே உறுதியாகும் என்றே தகவல்கள் வந்தன. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை பாமகவிற்கு கொடுத்ததாக செய்திகள் வந்தன.
இதற்காக அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 8 லோக்சபா சீட், + தேர்தல் நிதி என்று அதிமுக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை: இதை முதலில் பாமக ஏற்றுக்கொண்டு கூட்டணியை இறுதி செய்வதாக இருந்தது. ஆனால் கடைசி நொடியில் பாமக - பாஜக கூட்டணி கையெழுத்தானது. இது தொடர்பாக பாஜக டெல்லி தலைமையில் இருந்து அன்புமணிக்கு போன் வந்துள்ளது, இதில் பேசிய விஷயங்களே பாஜக - பாமக கூட்டணிக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
பாஜகவுடன் சென்றது: பாமக உயர்மட்ட குழு கூடி.. ராமதாஸ் கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் முழு உரிமையை கட்சி வழங்கிவிட்டது. பாஜக, அதிமுக இரண்டுமே ராஜ்ய சபா கொடுக்கவில்லை. பாஜக 10 சீட் தருவதாக கூறியது. அதிமுக 8 சீட் தருவதாக கூறியது. அடுத்த முறை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அதனால் பாமக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால் வன்னியர்களே பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். 10.5 சதவிகித ஒதுக்கீடு காரணமாக வன்னியர்கள் அதிமுகவை விரும்புகின்றனர். அதிமுக ஒரு நல்ல சான்சாக இருக்கும் என்று வன்னியர்கள் நினைத்தனர். அவர்கள் ஏற்கனவே சட்டசபை தேர்தலில் சேலம், தருமபுரியில் அதிக இடங்களை அதிமுக - பாமக கூட்டணிக்கு கொடுத்தனர். அப்படி இருந்தும் பாமக தலைமை பாஜகவுடன் சென்றுள்ளது.
இது வட தமிழ்நாட்டில் பாமக நிர்வாகிகளை கடுமையாக அப்செட் ஆக்கி உள்ளது. வெற்றி கூட்டணியை உடைத்துக்கொண்டு சென்றதால் அவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications