பொன். ராதாகிருஷ்ணன்தான் காரணம்? போட்டு உடைத்த விஜயதரணி? ஆதரவு தந்த தமிழிசை.. பாஜகவில் புதிய புயல்
சென்னை: விஜயதரணி பாஜகவுக்கு வந்து 6 மாதங்களாகியும் பதவி கொடுக்கப்படவில்லை என்று சொன்னதற்கு தமிழிசை செளந்தரராஜன் இன்று பதிலளித்திருந்தார். அதற்குள் விஜயதரணி, கன்னியாகுமரியில் தனக்குப் பொன்.ராதாகிருஷ்ணனால்தான் சீட்டு மறுக்கப்பட்டது என்று பேசி ஒரு புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் சார்பில் தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம் என்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முன்னாள் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பேசினார். பாஜகவுக்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பதவி வழங்கப்படவில்லை என்று அவர் வெளிப்படையாக மேடையில் போட்டு உடைத்தார். அந்த விவகாரம் பாஜக வட்டாரத்தில் இப்போது புயலைக் கிளப்பி இருக்கிறது.

பொதுக் கூட்டத்தில் விஜயதரணி பேசும் போது, "என்னை ஒரு விசயம் ஈர்த்தால் மட்டுமே அதில் ஈடுபடுவேன். என் கேரக்டர் அப்படித்தான். 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதில் இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பாஜகவில் இருக்கவேண்டும் என வந்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை. எதிர்பார்ப்புடன் தான் வந்திருக்கிறேன். எல்லோரும் அப்படி நினைத்துக் கொண்டால் அது தவறு. நன்றாக உழைக்கவேண்டும். கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டுபோகவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன். அதற்கு என்ன தேவை? ஏதேனும் ஒரு பதவி தேவை. பாஜகவுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் பிரச்சினை இல்லை. நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். ஏதேனும் மேலிடத்தில் பேசி எனக்கு நல்லது செய்வீர்கள்.
என் தொகுதியைச் சேர்ந்தவர் கேசவ விநாயகம். அவரை என்னைப் பற்றி நன்கு அறிவார். அதேபோல் தம்பி அண்ணாமலை என்னைப் பற்றி அறிவார். அவர் நிச்சயம் உங்களைக் கட்சி சிறப்பாகப் பயன்படுத்தும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கூடவே தமிழிசை அக்காவும் மேடையில் இருக்கிறார். அவர் பெண்களைக் கைவிடமாட்டார் என்று நினைக்கிறேன்.
பாஜக வளரவேண்டும் என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அந்தத் தவறைச் செய்தார்கள். அதை நான் தட்டிக் கேட்டேன். பெண்களுக்கு தலைமை தாங்கும் தகுதி கிடையாது எனக் காங்கிரஸ் நினைக்கிறது. அப்படிப்பட்ட கட்சியில் இருக்கக் கூடாது என்றுதான் பாஜகவுக்கு வந்தேன்.
ஆனால், பாஜகவில் தமிழிசை அக்காவை தலைவராக்கினார்கள். நிர்மலா சீதாராமனை மத்திய அமைச்சராக்கினார்கள். சாதாரண அமைச்சரா அவர்? நிதித்துறையையும் பாதுகாப்புத்துறையும் ஒரு பெண்ணை நம்பி கையில் கொடுத்தது பாஜக. அப்படி பெண்களை மதிக்கும் கட்சி பாஜக என்பதால்தான் இங்கே வந்தேன்" என்று பேசி இருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணாமலை மேடையில் விழுந்து விழுந்து சிரித்தார். பதவியைத் தருவாரா ? மாட்டாரா? என்பது புரியாத புதிராக இருந்தது அவரது சிரிப்பு. கூட்டத்தில் அமர்ந்து இருந்தவர்களும் விஜயதரணி பேச்சைக் கேட்டுச் சிரித்தனர்.
இதைப் பற்றி சென்னையில் பத்திரிகையாளர் கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், "சகோதரி விஜயதரணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பாஜகவைப் பொறுத்தவரைக் கட்சிக்காக யார் யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களைக் கட்சித் தலைமை கட்டாயம் மதிப்பளிக்கும். சில நேரங்களில் உடனே அங்கீகாரம் கிடைக்கும். சில நேரத்தில் காலதாமதம் ஆகலாம். எனவே விஜயதரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.நாடு முதல், இரண்டாவது கட்சி, மூன்றாவதுதான் சொந்த தேவை. அது விஜயதரணிக்கும் பொருந்தும்" என்று விளக்கம் அளித்து இருந்தார்.

மீண்டும் இந்த விவகாரம் குறித்து இன்று பேசி இருக்கும் விஜயதரணி பல உண்மைகளை வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார். அவர், "மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு எனக்கு உருவானது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. முதல் பட்டியலில் என் பெயர் இருந்தது ஊடகத்தினர் அறிவர். சீனியர் தலைவரான பொன் ராதாகிருஷ்ணன் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆகவே கன்னியாகுமரி தொகுதியில் என் பெயரை மாற்றி ராதாகிருஷ்ணனுக்குச் சீட்டுக் கொடுத்தார்கள். அதை ஏற்று நானும் அவருக்கு தேர்தல் வேலைகள் செய்தேன். அவர் கடந்த முறை எடுத்த ஓட்டுகளைவிட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாக எடுத்தார்.
நான் போட்டியிட்டிருந்தால் எவ்வளவு வாக்குகள் கிடைத்திருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. போட்டியிட்டிருந்தால்தான் அது தெரியும். நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது பொறுமையின் எல்லைக்கே போன பிறகுதான் கட்சியைவிட்டு வெளியே வந்தேன். பாஜகவில் 6 மாதங்கள்தான் ஆகி இருக்கிறது. ஆகவே பிரச்சினை இல்லை. பொறுத்திருப்பதால் ஒன்றும் ஆகிவிடாது. பொறுத்திருக்கவும் நான் தயாராக இருக்கிறேன்" என்று பேசியுள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications