ஜடேஜாவும் இல்லை.. ருத்துராஜும் இல்லை.. அப்படி போடு.. இவர்தான் அடுத்த சிஎஸ்கே கேப்டன்.. தோனி முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணிக்கு அடுத்த நிரந்தர கேப்டன் வரும் முன் இடையில் ஒரு டிரான்சிஷன் கேப்டன் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக சிஎஸ்கே தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஐபிஎல் விறுவிறுப்பாக கடைசி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

ப்ளே ஆப் ஆட்டங்களுக்கு போராடி வந்த சிஎஸ்கே அணி இன்று குஜராத் அணியை 2023 குவாலிபயர் சுற்றில் எதிர்கொள்ள இருக்கிறது.

இன்று வெற்றிபெற்றால் சிஎஸ்கே அணி நேரடியாக ஐபிஎல் 2023 பைனல்ஸ் போட்டிக்கு செல்லும்.

Is Rahane becoming the transition captain for CSK and What is the plan of Dhoni?

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை வெற்றியோடு அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் :இந்த நிலையில்தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற போவதாக பேச்சுக்கள் சுற்றி வரும் நிலையில்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது தொடர்பான ஆலோசனைகள், விவாதங்கள் எழுந்துள்ளன.

அதன்படி சிஎஸ்கே அணியிடம் சில திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டன் இருக்கும் விதமாக இளம் வீரரை கேப்டனாக கொண்டு வர திட்டங்கள் இருக்கிறதாம்.

ஆனால் அதற்கு முன் ஒரு டிரான்சிஷன் கேப்டன் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக சிஎஸ்கே தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அடுத்த சீசனில் தோனி சாதாரண வீரராக ஆடுவார். ஒரு டிரான்சிஷன் கேப்டன் இருப்பார்.

Is Rahane becoming the transition captain for CSK and What is the plan of Dhoni?

அதற்கு அடுத்த சீசனில் நிரந்தர கேப்டன் தேர்வு செய்யப்படுவார். டிரான்சிஷன் கேப்டன் பதவிக்கு ரஹானே தேர்வாக வாய்ப்பு உள்ளது. இவரை அணியில் எடுத்ததும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததும் இதனால்தான்.

அவர் சையது முஷ்டாக் தொடரில் சிறப்பாக கேப்டன்சி செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதனால் அவர் டிரான்சிஷன் கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

கேப்டன் யார்?:முதலில் சிஎஸ்கே அணிக்குள் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் என்ற திட்டத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டார். அவரை எதிர்கால கேப்டனாக்கும் திட்டங்கள் இருந்தன. ஆனால் அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.

இந்த சீசனில் கூட 2 போட்டிகளில்தான் ஆடினார். அவர் பார்மிலும் இல்லை. இன்னும் சிஎஸ்கே செட்டப்பில் முழுமையாக அவர் பொருந்தவில்லை. அதோடு அவருக்கு வயதும் இல்லை.

சிஎஸ்கே கேப்டன் ஆனாலும் கூட அவர் நீண்ட காலம் கேப்டன்சி செய்ய முடியாது. அதோடு அவர் ஐபிஎல்லை விட இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் நபர் என்பதால்.. அடுத்த சீசன்களில் உறுதியாக ஆடுவார் என்பதெல்லாம் சந்தேகம்தான்.

Is Rahane becoming the transition captain for CSK and What is the plan of Dhoni?

இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பயிற்சி வழங்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன் டிரான்சிஷன் கேப்டனாக ரஹானே இருப்பார். அடுத்த வருடம் தோனி அணியில் இருப்பார். கேப்டனாக இல்லாமல் ஆலோசகராக ரஹானேவிற்கு ஆலோசனை வழங்குவார், கெய்க்வாட்டிற்கு பயிற்சி கொடுப்பார்.

ஜடேஜாவை வைத்து செய்யப்பட்ட கேப்டன்சி முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அவர் கேப்டனாக நீடிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் ஜடேஜா மீண்டும் கேப்டனாகாத பட்சத்தில் ருத்துராஜ் கேப்டனாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சீசனில் வென்று கோப்பையை வென்றால் அதோடு தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது. அதன்பின் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்படுவார். இல்லையென்றால் அடுத்த சீசனில் புதிய கேப்டனோடு தோனி வெறும் வீரராக தொடருவார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+