அப்போ.. மக்களுக்கு பெட்ரோல், சிலிண்டர் விலையை விட மதம்தான் முக்கியமா? காங்கிரஸ் கேள்வி
சென்னை: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ள நிலையில், விலைவாசி உயர்வு வேலையிழப்பை விட மதம்தான் முக்கியத்துவம் பெறுகிறதா என தமிழ்நாடு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.
இதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா என 4 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் நிலைமை
நாட்டின் 2 வது பெரிய தேசிய கட்சி என கருதப்படும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக ஆட்சியிலிருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் அக்கட்சி பறிகொடுத்துள்ளது நாடு முழுவதும் உள்ள அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காங்கிரஸின் இந்த படுதோல்வி குறித்தும் பாஜவின் இந்த வெற்றி குறித்து சமூக வலைதளங்கள் அரசியல் பிரமுகர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

யுத்தம் தொடங்கியுள்ளது
தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. துணிச்சலோடும் திறமையோடும் தொடர்ந்து பயணிப்போம்" எனத் தெரிவித்தார்.

இதுதான் முக்கியமா
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழில்நுட்ப அணி தேர்தல் தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இல்லை, வேலை இழப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, இதை விட மதம் முக்கியத்துவம் பெறுகிறதா???" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ரீடுவீட் செய்துள்ளனர்.
Recommended Video

தமிழ்நாடு காங்கிரஸ்
மத்திய பாஜக அரசின் 7 ஆண்டுகால ஆட்சியில் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, மதவாதம் தலைதூக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட பலரும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வந்த நிலையில், பாஜகவின் இந்த வெற்றி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications