என்னது.. ரூ.3000 கோடி சர்தார் பட்டேல் சிலைக்குள் பாகிஸ்தானை 10 நொடிகளில் அழிக்கும் ராக்கெட் உள்ளதா?
Recommended Video

சென்னை: உலகின் அதி உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலை 182 அடி உயரம் கொண்டது. சுமார் ரூ.3,000 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக செலவில் இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் சிலை தேவையா என்ற, கேள்வி நாடெங்கும் எதிரொலிக்கிறது.
இந்த நிலையில், ஒரு பேஸ்புக் போஸ்ட் வைரலாகி வருகிறது. அதை பார்த்தால் சீரியசாகத்தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழக்கூடும்.

பேஸ்புக் போஸ்ட்
ஆனந்த் பிஎம், என்பவர்தான் இந்த பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதை பாருங்கள். ருபாய் 3000 கோடி செலவில் உலகில் உயரமான பட்டேல் சிலை தேவையா என்று மோடிஜி அவர்களை கிண்டல் செய்கிறார்கள்!!! உண்மையில் என்ன நடக்கிறது???
இந்த சிலை உலகில் பெரிய சிலை, இது வெறும் கல்லால் ஆன சிலை கிடையாது, நம் மோடிஜி அவர்களின் நேரடி கண்காணிப்பில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த infraorange என்னும் கதிர்கள் உள்ள rocketgrade titanium மூலம் செய்யப்பட்ட சிலை இது.

ராக்கெட் பாயும்
இந்த சிலையால் நம் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, பிற நாடுகளின் அணுஆயுத தாக்குதலை, ஏவுகணை தாக்குதல் போன்றவற்றை இந்த சிலை கண்டுபிடித்து இதன் உள் இருக்கும் தானியங்கி ultrajio rocket அழிக்கும்!!! பாகிஸ்தான் நாட்டை 10 நொடிகளில் தாக்கி அழிக்கும் சக்தி இந்த சிலைக்கு உண்டு, அதன் சுவிட்ச் மோடிஜி அவர்களின் இடுப்பில் எப்போதும் ஆயத்தமாக இருக்கும்!!! இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவு கூறுகிறது.

2000 ரூபாய் நோட்டு
இந்த பதிவை பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், ஸ்க்ரீன் ஷாட் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் பாதிக்கப்பட்டனர். அதை சமாளிக்க, 2000 ரூபாய் நோட்டிற்குள் செயற்கைக்கோளுடன் தொடர்பு கொள்ளும் சிப் உள்ளது என்று கதையளந்துவிட்டார்கள். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த சிப் பயன்படும். பணம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம் என்று தெரிவித்தனர்.
|
கிண்டல்தான் செய்றாரு
இப்போது, சர்தார் பட்டேல் சிலை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் இதுபோல ஒரு கருத்து பரவ விடப்படுகிறது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே ஆனந்த், இதை வஞ்சப்புகழ்ச்சியாகத்தான் கூறியுள்ளார். அவரது பதிவை சரியாக படிப்போருக்கு இது புலப்படும். ஆனால் அவர் பாஜக ஆதரவாளர் என்பதை போல சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்ட் ஷேர் செய்யப்படுகிறது. எது எப்படியோ, கற்பனையாக இருந்தாலும் நல்லா இருக்குல்ல!
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications