EXCLUSIVE: எடப்பாடி ஆட்சியில் ஊழலா? ஓபிஎஸுக்கு எதிராக ஊழல் ஆதாரம் வரட்டும்.. கல்யாணசுந்தரம் பேட்டி
சென்னை: ஜெயக்குமார் சொல்வதைபோல் அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஊழல் செய்ததற்கான வாய்ப்புகள் இருந்தால் காவல்துறையில் புகாரளிப்போம் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் எடுத்த நேர்காணலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கல்யாணசுந்தரம் கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் நெறியாளர், "திமுகவை எதிர்ப்பதே நோக்கம் என்கிறீர்கள். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை விட அதிமுக மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஓபிஎஸ் கடந்த ஆட்சியில் சம்பாதித்துவிட்டதாக கூறுகிறார்." என்று கூறினார்.

தவறுகள் நடந்திருக்கலாம்
அதற்கு கல்யாணசுந்தரம், தவறுகள் நடந்திருக்கலாம். அதை சுட்டிக்காட்டலாம் என்று பதிலளிக்க, "அந்த ஆட்சியின் முதலமைச்சர் யார்? உங்கள் கட்சியிலிருந்தே இந்த குற்றச்சாட்டு வருவதால் இந்த கேள்வியை முன்வைக்கிறேன். தங்கள் அமைச்சரைவில் ஒரு அமைச்சர் ஊழல் செய்தார் என உள்கட்சியில் இருந்து குரல் வந்தது தமிழ்நாடு வரலாற்றில் இது முதல் முறை." என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஜெயக்குமார்
ஊழல் செய்துவிட்டாரா? சம்பாதித்துவிட்டாரா? ஒவ்வொரு அமைச்சர்களுடைய துறைகளில் என்ன நடந்துள்ளது என்று எங்களுக்கு தெரியாது. இன்று தெரிந்ததால் அதை கொண்டு செல்கிறோம். அமைச்சர் ஜெயக்குமாரை ஒரு வட்டத்தை அடைக்க முடியாது. தொடர்ச்சியாக ஜெயக்குமார் திமுகவின் முகத்திரையை கிழித்துள்ளார். எனவே திமுவை விட்டுவிட்டு இதை செய்கிறார் என்று சொல்ல முடியாது. அமைச்சர் ஜெயக்குமார் ஊழல் அமைச்சரவை என்று சொல்லவில்லை.

ஊழல் நிரூபிக்கப்படட்டும்
ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படட்டும். அவருடைய ஆதங்கத்தை வைக்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இது உண்மையிலேயே நடந்ததா என்பது நிரூபிக்கப்படட்டும். தொண்டர்களுக்கு தவறாக எதுவும் நினைக்கமாட்டார்கள். ஊழல் புகார்கள் மாறி மாறி வைக்கப்படும்போது யார் உண்மையை பேசுகிறார்கள் என்பதை தொண்டர்களை யூகித்து அறிந்துகொள்கிறார்கள்.

முதலமைச்சரையும் தாண்டி தவறு
நாங்கள் மீண்டும் ஒற்றைத் தலைமையின்கீழ் அரசை அமைக்கப்போகிறோம். அதன் பின்னர் சலசலப்பு வராது. அன்று ஓபிஎஸ் அமைச்சராக இருந்தார். அவர் ஒரு தனிநபர். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உண்மையிலேயே ஒரு முதலமைச்சரையும் தாண்டி தவறு நடந்துவிட்டதாகவே அர்த்தம். நாங்கள் இரட்டை தலைமையின் ஆட்சியை நடத்தினோம். அதில் முதலமைச்சர் இருந்தார். அவருக்கு அமைச்சரவைகளை கவனித்தார்.

காவல்துறை செல்வோம்
எந்த அமைச்சரவையிலும் ஊழல் இல்லை என்பதை நாங்கள் வெளிப்படையாக இன்று வரை சொல்லி இருக்கிறோம். இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். அதிமுக வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை கொடுத்திருக்கிறது. திமுக வேண்டுமானால் வழக்கு தொடரட்டும். ஒரு பிரதான எதிர்க்கட்சியாக முழுமையான ஆதாரங்கள் இருந்தால் காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications