கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி.. புதிய தேதிகள் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

அன்பில் ஆலோசனை: இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார்.
கடந்த வார தொடக்கத்தில் அவர் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை செய்தார். அதன்பின் மீண்டும் தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.
இந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறி இருந்தார் . இந்த நிலையில்தான் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 7ம் தேதி பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்த நிலையில் அந்த தேதி உறுதி செய்யப்பட்டது.

1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படும்முன் கோடை வெயில் குறையும் என்று எதிர்பார்க்கட்டது.
வெயில் குறையவில்லை: ஆனால் மே மாதம் முடிந்தும் இன்னும் வெயில் குறையவில்லை. மாறாக வெயில் இப்போதுதான் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி வெயில் அளவு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் பகல் நேரங்களில் 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கூட பல இடங்களில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் வெப்பநிலை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மீண்டும் தள்ளிப்போகிறது : இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் வெயில் மோசமாகிக்கொண்டே இருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications