Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சபரீசன்".. மெகா புள்ளியின் ராஜதந்திரம்.. அவர் "இங்கே" வர போறாராமே.. திமுகவுக்கு குஷியோ குஷி..!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகழேந்தி எடுக்கும் அஸ்திரம் என்னென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஒரு காரியம் செய்து, அதற்கு மேல் பரபரப்பை கூட்டி வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சேலம் மாவட்ட எஸ்பி ஆபிசில் பெங்களூர் புகழேந்தி புகார் மனு அளித்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளவர்கள் குடும்ப ஆதிக்கம் அதிகம் இருந்தது.. தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் மட்டுமில்லை. நான்கு முதலமைச்சர்கள் ஆட்சி செய்து வருகின்றனர் என்று பேசியிருக்கிறார்.

சபரீசன்

சபரீசன்

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகிய 4 பேர்களும் முதல்வராக ஆட்சி செய்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.. இது ஜனநாயக படுகொலை.. கடந்த 4 ஆண்டுகாலமாக முதல்வராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமி பற்றி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் எப்போதும் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்ததில்லை. ஆனால் இபபோது முதல்வர் குடும்பத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்... ஆனால் இதற்கு ஆளும் கட்சி ஏன் அமைதியாக இருக்கிறது என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

 தேசத்துரோகம்

தேசத்துரோகம்

புகழேந்தியின் இந்த புகாரும், பேட்டியும் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. ஆளும் தரப்பில் இருந்து புகாரை தராமல், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட புகழேந்தி ஏன் புகார் தரவேண்டும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. இதைதான் அவரிடமே செய்தியாளர்கள் கேட்டனர்.. ஆளும் கட்சி குற்றச்சாட்டு வைக்காத நிலையில், நீங்க புகார் அளித்திருக்கிறீர்களே? என்ற கேள்விக்கு, நியாயம் என்ற பெயரிலேயே புகார் அளிக்க வந்துள்ளேன் என்று சொல்லி உள்ளார்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களை முதலமைச்சர்கள் என்று அவதூறாகப் பேசியது தேசத்துரோக குற்றம் என்றும் காரணம் சொல்கிறார் புகழேந்தி.

 தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர்

புகழேந்தி சொன்ன இதே தேசதுரோக குற்றம், ஆளும் அரசுக்கு தெரியவில்லையா? என்பதே மற்றொரு சந்தேகம்.. ஏற்கனவே புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சமயம், அவர் எந்த கட்சிக்கு தாவுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. முழுக்க முழுக்க சசிகலா ஆதரவாளர் என்பதால் நிச்சயம், அவர் பக்கம் தாவ வாய்ப்புள்ளது என்றே கணிக்கப்பட்டது.. ஆனால், புகழேந்தி இப்போது வரை தன்னை சசிகலா ஆதரவாளர் போல காட்டிக் கொள்ளவில்லை.

 ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி


இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, மறுபடியும் திமுகவுக்கே சப்போர்ட் செய்திருந்தார்.. அதாவது, பிரச்சாரத்தில் பேசும்போது, ராஜேந்திரபாலாஜி, முதல்வர் ஸ்டாலினை மிரட்டினாராம்.. "இது எஸ்பி வேலுமணியின் கோட்டை... எனவே, எங்கள் அனுமதி இல்லாமல் தொண்டாமுத்தூர் எல்லையை நீங்கள் தாண்ட முடியாது... தைரியம் இருந்தால் இப்போது நீங்கள் தொண்டாமுத்தூர் வரவேண்டும் என ஸ்டாலினுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசினாராம்.. உடனே புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் அளித்தார்.

 புதுஸ்ஸா இருக்கே

புதுஸ்ஸா இருக்கே

அப்போதும் இதே சந்தேகம்தான் எழுந்தது.. இப்போதும் அதே சந்தேகம்தான் எழுகிறது.. ஒருவேளை இவர் திமுக பக்கம் தாவ போகிறாரா? என்பதே அந்த சந்தேகம்.. அல்லது புகார் கொடுக்கிறபோது மட்டும்தான் திமுகவுக்கு ஆதரவாக புகழேந்தி இருக்கிறாரா? என்று தெரியவில்லை..அதேசமயம், எனது வாழ்நாளில் நான் தோற்கடிக்க வேண்டிய ஒரு நபர் எடப்பாடி பழனிச்சாமி என்பதையும் விடாமல் சொல்லி கொண்டிருப்பதால், இதற்காகவே திமுகவை பயன்படுத்தி கொண்டு வருகிறாரா? என்ற சந்தேமுகம் எழுகிறது.. ஆகமொத்ததம், திமுகவுக்கும் வந்து சேராமல், சசிகலா பக்கமும் போகாமல், அதிமுகவை குழப்பியடித்து கொண்டிருக்கிறார் புகழேந்தி.. அரசியலில் இது புதுஸ்ஸா இருக்கே என்று முணுமுணுக்கிறார்கள்..!

தஞ்சை புள்ளி

தஞ்சை புள்ளி

ஏற்கனவே, அதிமுகவின் தஞ்சை புள்ளி ஒருவர் தற்போது அதிருப்தியில் உள்ள நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் தாவலாம் என்று பேசப்பட்டு வருகிறது.. சசிகலாவின் ஆதரவாளர் என்பதுடன் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இப்படி ஒரு விஷயம் பரபரத்து வருகிறது.. இதற்கு நடுவில், அதிமுகவில் இருந்து இன்று திமுகவில் ஐக்கியமாகி இருக்கும் சீனியர் ஒருவர், அதிமுக புள்ளிக்கு தூது அனுப்பினாராம்.. ஆனால் அதுகுறித்து அவர் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.. ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக அவர் இருந்து வரும் நிலையில், திமுக பக்கம் வருவாரா? என்பதும் சந்தேகம்தானாம்.. எப்படி பார்த்தாலும், மாற்று கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் திமுக பக்கம் நகர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+