திருவொற்றியூர் கட்டிட விபத்து.. குளத்தின் மீது கட்டப்பட்டதா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு?
சென்னை: திருவொற்றியூரில் பகுதியில் உள்ள அரிவாக்குளத்தில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள டி பிளாக் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு முழுவதும் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு குடிசை பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு வழங்கப்படும்.
அப்படி திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் கடந்த 1998-99 காலகட்டத்தில் குடிசை மாற்று வாரிய சார்பில் வீடுகள் கட்டப்பட்டு அப்பகுதி மக்கள் குடியேற்றப்பட்டனர்.

இடிந்து விழுந்த குடியிருப்பு
சுமார் 22 ஆண்டுகளாக பொதுமக்கள் இந்தக் கட்டித்தான் தான் வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 9 பிளாக்குகளில் 365 வீடுகள் உள்ளன. இதில் சி மற்றும் டி பிளாக் வீடுகள் அருகே அமைந்துள்ளன. இரண்டு பிளாக்குகளிலும் தலா 24 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆண்டுகள் செல்ல செல்ல அதிகாரிகளும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் பால்கனி, மாடிப்படிகள் உள்ள இடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது
இந்நிலையில், டி பிளாக் கட்டிடத்தில் உள்ள வீடுகளிலேயே கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விரிசல் இன்று அதிகாலை நேரத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தரைதளத்தில் அமைந்த வீடுகளில் விரிசல் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அச்சமடைந்த அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிகாரிகளைச் சந்தித்து விரிசல் குறித்து புகார் அளிக்க மக்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது.

உயிர் தேசம் இல்லை
அந்த சமயத்தில் டி பிளாக் கட்டிடம் திடீரென அப்படியே விழுந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக அப்போது பொதுமக்கள் யாரும் இல்லை என்பதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளை அகற்றி, யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடி வருகின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மற்ற பிளாக்குகளில் இருந்த மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

உடைமைகளை இழப்பு
அவர்கள் அனைவரும் தற்காலிகமாக சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகளை சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். இந்த விபத்தில் உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், அங்கு வசித்த 24 குடும்பங்களும் தங்கள் உடைமைகளை முற்றிலுமாக இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

குளத்தின் மீது?
இந்தச் சூழ்நிலையில், அப்பகுதியில் இருந்த குளத்தின் மீதே இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு இருந்த குளத்தின் காரணமாகவே இப்பகுதிக்கு அரிவாக்குளம் என்று பெயர் வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த குளத்தின் மீதே இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டதாகவும் இதற்காகக் குளத்தின் மீது கான்கரிட் தளம் அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications