பொன்முடி பதவிக்கு சிக்கல்.. மொத்தமாக அமைச்சரவையை மாற்ற ஸ்டாலின் முடிவு? கோட்டையில் பரபரப்பு
சென்னை: சீனியர் அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்கள் கட்சி வேலைக்கு அனுப்பப்படலாம்.. அதற்கான யோசனையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என கோட்டை வட்டார தகவல்கள் வருகின்றன. வரிசையாக மூத்த அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விசாரித்தார். இதில்தான் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பொன்முடி குற்றம் செய்ததை உறுதி செய்த ஹைகோர்ட், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மாற்ற திட்டம்: ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏ வ வேலு உள்ளிட்ட அமைச்சராக்கள் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்: இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் சமீபத்தில் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர். சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இவர்களை கைது கூட செய்ய வாய்ப்புகள் உள்ளன.
சீனியர்களை கைது செய்து மொத்தமாக கட்சியை முடக்கும் திட்டங்களில் இவர்கள் ஈடுபடலாம். அதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும். தேர்தல் நேரத்தில் பாஜக இந்த திட்டத்தை களமிறக்க நினைக்கலாம். இப்படி செய்து ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தலாம். திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தலாம் என்று நினைக்கலாம். அதற்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் மனதில் இன்னொரு திட்டம் உள்ளது. ஸ்டாலின் மனதில் பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது.
ஸ்டாலின் திட்டம்: சமீபத்தில் ஏ வ வேலு ரெய்டு எதிர்பார்த்த ரெய்டுதான். மூத்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் கண்டிப்பாக இந்த ரெய்டுகளை தொடருவார்கள். இவர்கள் எல்லாம் திமுகவின் பண வங்கி. அவர்கள் திமுகவிற்கு பேங்க் போல செயல்படும் நபர்கள். அதனால் இங்கே ரெய்டு நடத்துகிறார்கள். பாஜகவின் குறி இவர்கள்தான். இவர்கள் எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்துவிட்டார்கள் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மற்றப்படி ரெய்டு மூலம் எதுவும் நடக்காது.
வருமான வரித்துறை ரெய்டு காரணமாக பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தால் அது சிக்கல் ஆகும். இந்த ரெய்டுகள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். திமுகவிற்கு வரக்கூடிய பணத்தை கட் செய்ய வேண்டும். திமுகவிற்கு பணம் செல்ல கூடாது என்பதை மனதில் வைத்தே பாஜக இந்த ரெய்டுகளை ஏவி விட்டு உள்ளது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க ஸ்டாலின் திட்டத்தின் படி முதலில் இருக்கும் 10 சீனியர்களை பார்ட்டி வேலைக்கு இறக்கலாம்.
தேர்தல் பணிகளை கொடுக்கலாம். மந்திரி பதவிகளை பறிக்கலாம். அவர்களை கட்சியில் முன்னுக்கு கொண்டு வரலாம். இளம் நபர்களை அமைச்சர்கள் ஆக்கலாம். சீனியர்களுக்கு கட்சியில் முன்னுரிமை. இளம் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்கள் பதவிகள். இளைஞர்களை அமைச்சர் பதவிக்கு கொண்டு வந்து மாற்றம் செய்யலாம் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த ஐடியாவில் ஸ்டாலின் இருப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.
பாஜகவிற்கு பதிலடி கொடுக்க ஸ்டாலின் இந்த திட்டத்தில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications