விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை
சென்னை: தமிழகத்தில் மட்டும் தேர்தல் அட்டவணை அறிவிப்பிற்கும் வேட்புமனு நடைமுறைகளுக்குமான கால இடைவெளி மிக அதிகமாக இருப்பதற்கு காரணம் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவகாரங்களில் பாஜகவிற்கு போதிய அவகாசம் கிடைக்க வேண்டும் என்பது தான் என தேர்தல் ஆணையம் மீது விமர்சன அம்புகள் பாய்ந்துள்ளன.
2026 சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. 2014 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. ஆனால், இந்த தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரவைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைமை தேர்தல் பணியாற்றி வருகிறது. அதனால் தான், அதிமுகவில் நிலவும் அதிகார போட்டியை தனக்கு சாதமாக்கி கொண்டு, அதிமுக செல்வாக்கு மற்றும் வாக்கு வங்கியையும் சாதமாக்கிவிட வேண்டும் என்ற ரீதியில் காய்களை நகர்த்தி வருகிறது பாஜக தலைமை.

மேலும் புதிய வரவான தவெகவையும் தங்கள் வலைக்குள் இழுக்கும் வேலையையும் செய்து வருகிறது. கூட்டணி ஆட்சி என அதிமுகவை கன்வின்ஸ் செய்ய வேண்டும். ஆட்சியில் பங்கு என ஆசை காட்டி தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற இரண்டு அசைன்மெண்டுகளில் பாஜக தலைமை முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இரண்டும் இன்னும் கனியவில்லை. அதனால், இந்த வேலைகளை செய்து முடிக்க பாஜகவிற்கு போதிய அவகாசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் வாக்குப்பதிவு தள்ளிப் போகிறதோ என பலரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். மார்ச் 15ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட 5 மாநில தேர்தல் அட்டவணையை பார்த்தாலே இது புரியும் என தங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
தேர்தல் ஆணைய அட்டவனைப்படி, கேரளா மற்றும் புதுச்சேரியில் மார்ச் 16 வேட்புமனு தாக்கல் தொடங்கி 23ம் தேதி முடிகிறது. அதாவது, தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட அடுத்த நாளே வேட்பு மனு தாக்கல் தொடக்கம். கேரளாவிலும் இதே நிலை தான். ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சுமார் 15 நாட்களுக்குப் பிறகு தான் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வழக்கமாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் கிட்டத்தட்ட ஒரே தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால், இந்த முறை புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டிற்குமான வாக்குப்பதிவில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இடைவெளி. இந்த முரண்பாட்டை சுற்றிக்காட்டி தான் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுகிறதோ என சந்தேகத்தை எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுகவை ஓரளவிற்கு கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்து விட்டது பாஜக. ஆனாலும், திமுகவை வீழ்த்த தவெகவின் சப்போர்ட்டும் தேவை என நினைப்பதால் தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வேலையை முடுக்கிவிட்டுள்ளது பாஜக. ஆனாலும், பாஜக எதிர்பார்க்கும் பலமான கூட்டணி இன்னும் அமையவில்லை. அதற்காகத்தான் தேர்தல் தேதி அறிவிப்பிற்கும் வேட்புமனு தாக்கலுக்குமான 15 நாள் இடைவெளியோ?....என்ற பொதுவான சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதை விட, தங்களுக்கான அடித்தளத்தை ஸ்ட்ராங்காக அமைக்க வேண்டும் என்தபதில் தான் பாஜக குறியாக இருக்கிறது. அதனால் தான் ஜெயிக்காவிட்டாலும், தங்களுக்கான அரசியல் சாசன பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் பாஜகவின் குரல் பலமாக ஒலிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு பாஜக வேலை செய்து வருகிறது. அதற்கான ஸ்பேசை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம் என விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எது உண்மை என்பது மேலே இருப்பவர்களுக்குத் தான் வெளிச்சம்...












Click it and Unblock the Notifications