பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்கப்படாது? தமிழக அரசு ஒதுக்கிய குறைவான நிதி.. குழப்பத்தில் மக்கள்
சென்னை: பொங்கல் பரிசில் பணம் வழங்கப்படாதோ என்ற கேள்வி மக்கள் இடையே திடீரென எழுந்துள்ளது. இதற்காக அரசு ஒதுக்கிய தொகை குறைவாக இருப்பதால் பணம் வழங்கப்படாதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பிற்காக ரூ.248 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு. ஆனால் இந்த தொகை பணம் வழங்க போதுமானதாக இருக்காது. 2 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வீதம் அளித்தாலும் ரூ.2000 கோடி தேவை. ஆனால் அரசு குறைவாகவே பணம் ஒதுக்கி உள்ளது.

மொத்தமாக அரிசி, கரும்பு உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்ய ரூ.248 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லையா என கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படவுள்ள ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேசமயம் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
பச்சரிசி, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 85% வரை நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெகு விரைவில் பொங்கல் ரொக்கப் பரிசுத் தொகை மற்றும் கரும்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் ரொக்கப் பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22.291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு வட்டாரங்கள் தகவல்
ஆனால் அரசு வட்டாரங்களோ.. இது பொருட்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி. மற்றபடி ரொக்கப்பணம் கொடுக்க தனியாக நிதி ஒதுக்கப்படும். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. இது வெறுமனே பொங்கலுக்கு முன் பொருட்கள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று கூறி வருகின்றனர். ஆனாலும் அரசின் இந்த செயலால் பொங்கல் பரிசில் பணம் வழங்கப்படாதோ என்ற கேள்வி மக்கள் இடையே திடீரென எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது.
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு - 2026 டோக்கனில்,
கடையின் பெயர் :
கு.அட்டைதாரர் :
பெயர் :
கு.அட்டை எண் :
கிராமம் / தெரு :
டோக்கன் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரசு பொங்கல் பண்டிகைக்கான கரும்பு கொள்முதலை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குப் பிறகு மட்டுமே தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications