தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?.. டெல்லியில் ஆலோசனை.. ஸ்டாலினின் சாய்ஸ் யாராக இருக்கும்?
சென்னை: சென்னையில் அடுத்த டிஜிபி யார் என்பதை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு அதிகாரியையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வரும் நிலையில் முக்கிய பதவியான டிஜிபி பதவிக்கு ஸ்டாலின் யாரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ளவர் ஜே கே திரிபாதி. இவரது பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கு அடுத்தவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு உள்ளது.
Recommended Video
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார், சிங், கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்கள் கொண்ட பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

டிஜிபி
இவர்கள் அனைவரும் காவல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்கள். மேற்கண்ட பட்டியலில் 3 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும்.

தமிழக அரசு தேர்வு
அந்த 3 பேரில் இருந்து ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். திமுக அரசு மே 7ஆம் தேதி பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு அதிகாரியையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக முதல்வர் ஸ்டாலின் யாரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரயில்வே துறை டிஜிபி
சீனியாரிட்டி அடிப்படையில் ரயில்வே துறை டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபுவை ஸ்டாலின் தேர்வு செய்வார் என தெரிகிறது. 1987 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சான இவருக்கு அடுத்த இடத்தில் கரன் சின்ஹா உள்ளார். இவருக்கு அடுத்த பணி மூப்பு அடிப்படையில் மூன்றாவது இடத்தில் சுனில் அரோரா உள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். சிஆர்பிஎஃப்பின் சிறப்பு டிஜிபியாக உள்ளார்.

ஆலோசனை கூட்டம்
தமிழகத்தின் முக்கிய பிரிவான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வெளியாகும் என தெரிகிறது. சீனியாரிட்டியில் முதலிடத்தில் உள்ள சைலேந்திர பாபுவே தமிழக டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள தெரிவிக்கின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications