சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இருந்து விலகுகிறாரா.. "இது"வா?.. புகையும் தேனி.. தங்கமே தந்த விளக்கம்

தங்க தமிழ்செல்வன் எம்பி பதவி கிடைக்காதது குறித்து விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் இருந்து அதிருப்தி காரணமாக விலகுவதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், அது தொடர்பான விளக்கத்தை, மூத்த தலைவர் தங்க தமிழ்செல்வனே அளித்துள்ளார்.

Recommended Video

    Thanga Tamilselvan தந்த விளக்கம் | Theni DMK ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றப்படும்? | #Politics

    ராஜ்யசபா எம்பிக்கான தேர்வில் திமுக, ஏற்கனவே 3 பேரை அறிவித்திருந்தது.. ஒரு பதவியை காங்கிரஸ் கேட்டு வருகிறது.

    ஆனால், திமுக அதற்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.. இதனால், அந்த ஒரு பதவியையும் திமுகவே அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின.

    டிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்டிடிவி கட்சி தலைவர் மாதிரியா இருக்கார்.. பயங்கரவாதிகளின் தலைவரால்ல செயல்படுகிறார்.. தங்கதமிழ்செல்வன்

     செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    அப்படி அறிவித்தால், அந்த பதவி யாருக்கு போகக்கூடும் என்றும் அனுமானங்கள் எழுந்தன.. அதில் அடிபட்ட ஒரு பெயர்தான் தங்க தமிழ்ச்செல்வன்.. இதற்கு காரணம், அமமுகவில் இருந்து, தங்க தமிழ்செல்வனை போல திமுகவுக்கு வந்தவர்தான் செந்தில்பாலாஜி.. இதில் செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டார்.. தங்கதமிழ்செல்வனை பொறுத்தவரை, திமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர்.. கடந்த முறை தேர்தலில் எப்படியும் இவர் வெற்றிபெற்றுவிடுவார் என்றே கணிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அது மிஸ் ஆகிவிட்டது..

     தங்க தமிழ்ச்செல்வன்

    தங்க தமிழ்ச்செல்வன்

    "சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாவட்ட தலைவர்களை தோற்கடித்தால், நிச்சயம் அமைச்சர் பதவி அல்லது முக்கிய பதவி உண்டு" என்று ஏற்கனவே திமுக மேலிடம் உறுதி தெரிவித்திருந்தது. ஆனாலும், தங்க தமிழ்செல்வன் தோல்வியை சந்தித்தார்.. என்றாலும், ஓபிஎஸ்ஸுக்கு தேர்தல் களத்தில் இறுதிவரை நெருக்கடி தந்து கொண்டேயிருந்தார்.. எனவே, இவருக்கு விரைவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு பேச்சு இருந்து வந்த நிலையில்தான், ராஜ்யசபா சீட் தேடி வரலாம் என்கிறார்கள்.

     எம்பி பதவி இல்லை

    எம்பி பதவி இல்லை

    எனினும் இவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.. இதனால் தங்க தமிழ்செல்வன் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் கசிந்தன.. அதுமட்டுமல்ல, திமுகவில் இருந்தே விலக போகிறாராம் என்றும் சில விஷமிகள் கொளுத்தி போட்டனர்.. இதற்கு நடுவில் இன்னொரு செய்தியும் வெளியானது.. அதன்படி தேனி வடக்கு, தெற்கு மாவட்டங்களை, தேனி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது.. இப்படி தேனியை பற்றியும், தங்க தமிழ்ச்செல்வன் பற்றியும் ஏகப்பட்ட புரளிகளும், வதந்திகளும் வெளியாகியபடியே இருந்தன.

     நெத்தியடி

    நெத்தியடி

    இந்நிலையில், இதற்கெல்லாம் சேர்த்து தங்க தமிழ்ச்செல்வனே சரியான நெத்தியடி பதிலை தந்துள்ளார்.. போதுமான விளக்கத்தையும் செய்தியாளர்களிடம் அளித்துள்ளார். அவர் சொல்லும்போது, "தேனி மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம் கிராமம் வழியாக செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

     ஆதிப்பட்டி கிராமம்

    ஆதிப்பட்டி கிராமம்

    இந்தச் சாலையை நெடுஞ்சாலைத் துறையே முழுமையாக எடுத்து கொண்டு அந்தச் சாலையைச் சீர் செய்து தர வேண்டும்.‌ ஆதிபட்டி கிராமம் வழியாக செல்லும் புதிய புறவழிச்சாலையில் பூதிப்புரம் கிராம மக்கள் பயணிக்க வேண்டும் என்றால் பல கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே பூதிப்புரம் கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புறவழிச்சாலையை இணைக்கும் விதமாக இணைப்புச் சாலை ஒன்றை அமைக்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

     ராஜ்ய சபா சீட்

    ராஜ்ய சபா சீட்

    என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் வரும் கருத்துகள் அதிகப் பார்வையாளரை பெறுகிறது. இதில் சிலர் நான் ராஜ்ய சபா எம்பியாக போகிறேன் என்று சொல்லி வந்தார்கள்.. இப்போது திமுகவிலிருந்தே விலகிவிட்டேன் என்று அவதூறு செய்தியையும் பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் நான் புகார் அளித்துள்ளேன்.

     ஒருங்கிணைந்த தேனி

    ஒருங்கிணைந்த தேனி

    அந்தப் புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்... தேனி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றப்படும் என்ற யூகத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. தேனியைப் பொருத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறோம். அதனால் எங்களுக்குள் (வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள்) எந்தப் பிரச்சனையும் இல்லை" என்றார் தங்கத் தமிழ்ச்செல்வன்.

    English summary
    Is thanga tamilselvan going to leave DMK and What is happening in Theni District தங்க தமிழ்செல்வன் எம்பி பதவி கிடைக்காதது குறித்து விளக்கம் தந்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X