ஜெயக்குமாருக்கு "சர்க்கரை".. தம்பிதுரைக்கு "பொங்கல்".. திருவாரூரில் களம் காண அஞ்சுகிறதா அதிமுக!
திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: திருவாரூர் தேர்தலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டுகிறதா என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.
எப்படா திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று இவ்வளவு நாள் காத்து கிடந்தது தமிழகம். ஏற்கனவே ரெட் அலர்ட் காரணம் என்று கூறி தேர்தல் தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
சட்டமன்ற தொகுதி காலியானது என்பதை அறிவித்து இத்தனை நாளாகியும் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதாக பேச்சு எழுந்தது. ஆளும் தரப்பு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பதால்தான் தேர்தலை நடத்த ஆர்வம் காட்டவில்லை என்று பகிரங்க குற்றச்சாட்டுக்களே எழுந்தன.

பொதுநல வழக்கு
இடைத்தேர்தல்களை உடனடியாக நடத்துவது சம்பந்தமாக கோர்ட்டுக்கு போய் பொதுநல வழக்கு போட்டு, பிறகு ஒரு வழியாக, திருப்பரங்குன்றத்துக்கு இல்லை, திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் என்று முடிவானது. அதற்கான தேதியையும் தேர்தல் கமிஷன் குறித்து கொடுத்தது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதற்கு பிரதான கட்சிகள் கருத்துக்களை கூறின. குறிப்பாக, அதிமுக, திமுக, அமமுக என்று வரிசைகட்டி வரவேற்றன.

சர்க்கரை பொங்கல்
அதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது. அதிமுக சார்பில் முதல் விருப்பு மனுவை திருவாரூர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது அஷ்ரப் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
இதனிடையே "தேர்தல் என்பது அதிமுகவிற்கு சர்க்கரை போன்றது என்றும், திருவாரூர் இடைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உடனடி மறுப்பு
ஆனால் மற்றொரு புறம், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த வழக்கை அவசர மனுவாகவும் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதற்கு நீதிமன்றம் உடனடி மறுப்பு தெரிவித்துள்ளது.

சரியாக இருக்காது
இது போக, அதிமுக எம்பி தம்பிதுரை இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பகிரங்க பேட்டியே கொடுத்துவிட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம், "கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் நிவாரணமே தரப்படாமல் இருக்கிறது. அதுவும் இல்லாமல், இது பொங்கல் நேரம் என்பதால் திருவாரூரில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது, அதனால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பின்வாங்குவது ஏன்?
ஏற்கனவே இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக அரசு மீது மக்கள் குறை சொல்லி வரும்நிலையில், இப்படி ஆளும் தரப்பே தேர்தலை சந்திக்க பின் வாங்குவது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது. கஜா புயல் நிவாரணத்தை இவ்வளவு நாள் ஏன் திருவாரூர் மாவட்டத்துக்கு அரசு தராமல் தாமதம் செய்தது? டெல்டா மாவட்டங்களிலேயே அதிக சேதத்தை சந்தித்ததில் திருவாரூர் ஒன்று என்பது அரசுக்கு தெரியாதா? கருணாநிதி தொகுதி என்பதால் நிவாரணத்தை இதுவரை தராமல் நிறுத்தி வைத்திருந்ததா?

எப்படி பாதிக்கும்?
அல்லது இடைத்தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க இதை ஒரு சாக்காக பயன்படுத்த வேண்டும் என்பதால் நிவாரணத்தை தராமல் தாமதித்ததா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. பொங்கல் வருவது ஜனவரி 15ம் தேதி, ஆனால் இடைத்தேர்தலோ 28-ம் தேதி. பண்டிகைக்கும் தேர்தலுக்கும் நிறைய நாள் இடைவெளி இருக்கும்போது, எந்தவிதத்தில் பண்டிகை தேர்தலை பாதிக்கும் என்று தம்பிதுரை சொல்கிறார் என தெரியவில்லை. எதற்காக அதிமுக இப்படி பின் வாங்குகிறது என தெரியவில்லை.

ஆஸ்தான தொகுதி
கருணாநிதியின் ஆஸ்தான தொகுதி என்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளதா? அல்லது திருவாரூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தால், அது வரப்போகிற பெரிய தேர்தல்களை பாதிக்கும் என்று அதிமுக நினைக்கிறதா? அல்லது ஏற்கனவே ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி உள்ள நிலையில், திமுக திருவாரூரில் வெற்றி பெற்றுபெற்றுவிட்டால், தங்களுக்கு மேலும் பின்னடைவை தரும் என்று தயங்குகிறதா என அடுக்கடுக்கான சந்தேகங்களுக்கு விடை தெரியவில்லை.

மாறி மாறி குழப்புகிறது
இடைத்தேர்தல் எங்களுக்கு சர்க்கரை பொங்கல், வேட்புமனு தாக்கல் என்று ஒரு புறமும், இடைத்தேர்தலை நடத்த கூடாது என்ற அமைச்சரின் பேட்டி, கோர்ட்டில் வழக்கு என்பது மற்றொரு பக்கமும் இன்று ஒரே நாளில் ஆளும் தரப்பின் நடவடிக்கைகள் அதிமுகவினர் உள்ளிட்ட தமிழக மக்களையே குழப்பி அடித்து வருகிறது.
-
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications