ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவித்தது ஏன் தெரியுமா? புகழேந்தி சொல்லும் "பாயிண்ட்"
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பின் நியமனம் எதுவுமே செல்லாது. உதயகுமாரை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகம் நடத்துகின்றனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கியதாக அறிவித்து அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதையடுத்து சபாநாயகரிடம் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பதவி நீக்கம்
அதிமுகவில் ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் மோதலால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பொதுக்குழுவிலேயே நீக்கப்பட்டனர். பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்களது நீக்கியது செல்லாது எனக் கூறி ஓபிஎஸ்ஸும் எடப்பாடி தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.

ஓபிஎஸ் இடத்தில் ஆர்பி உதயகுமார்
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு அந்தப் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு
இதுதொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "அதிமுக குழப்பம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது. புதிய நியமனங்களை ஏற்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் கடிதம் வழங்கியிருக்கிறார். அது பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருக்கிறார். ஆக, இவர்களது நியமனம், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் சபாநாயகரின் முடிவு.

சபாநாயகர் முடிவு
சட்டசபைக்கு முழு பொறுப்பும் உடையவர் சபாநாயகர். அவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. சபாநாயகர் எடுப்பதுதான் இறுதி முடிவு. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கட்சி என்றாலும், கட்சி மூலமாக வரும் ஆட்சி என்றாலும், அத்தனை உரிமைகளையும் பெற்றவர் ஓபிஎஸ். ஆகவே, எடப்பாடி பழனிசாமி தரப்பின் நியமனம் எதுவுமே செல்லாது.

இதுவும் ஒரு தவறு
அவர்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பொதுக்குழுவைக் கூட்டலாம். யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். ஜெயலலிதா வகித்த பதவியில் யார் வேண்டுமானாலும் அமரலாம். இப்படி தவறு மேல் தவறாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு தவறுதான் உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது.

உதயகுமாரை சமாதானப்படுத்த
உதயகுமாரை சமாதானப்படுத்தி ஆகவேண்டும். எனவே அவருக்கு ஒரு பதவி கொடுப்பதற்காக இப்படி ஒரு தேர்வு நாடகத்தைச் செய்துள்ளனர். இதுவும் முன்பு நடந்தது போல் தான் சென்று முடியும். நிச்சயமாக இது செல்லவே செல்லாது. சபாநாயகர் இந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications