இதுதான் பிளானே.. டெல்லியில் இருந்து பறந்த போன்.. பாஜகவின் அடுத்த அசைன்மென்ட்.. ரெடியாகும் திமுக?
தமிழக பாஜக அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்கிறது
சென்னை: தொண்டர்களும், தலைவர்களும் பாஜகவின் தேர்தல் வெற்றியை நினைத்து பூரிப்படைந்து வரும் அதேசமயம், அடுத்தக்கட்ட நடவடிக்கையை நோக்கி அக்கட்சி நகர்ந்துள்ளது..!
இந்த முறை பாஜக தனித்து களமிறங்கியதுமே நிறைய சந்தேகங்கள் எழுந்தன.. ஏற்கனவே திமுக கூட்டணி பலத்துடன் களமிறங்கியது..
ஆனால் அதிமுகவோ தனித்து போட்டியிட்டது.. பாமக, நாம் தமிழர், மநீம, அமமுக கட்சிகளும் தனித்து போட்டியிட்டன.. இதைதவிர தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும் தனித்து போட்டியிட்டனர்.

புது சுயேட்சைகள்
இதைதவிர ஏராளமான சுயேட்சைகளும் போட்டியிட்டனர்... இப்படி மொத்த பேரும் சேர்ந்து ஓட்டுக்களை பிரிக்கவிருக்கும் சூழலில் பாஜக எந்த அளவுக்கு வெற்றியை ஈட்டும் என்ற சந்தேகம் பரவலாகவே எழுந்தது... ஆனால், இந்த தேர்தலில் ஓரளவு வெற்றியை பெற்று, அனைத்து தமிழக கட்சிகளுக்கும் அதிர்ச்சி தந்துள்ளது. 21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது...

சென்னை மாநகராட்சி
242 பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளிட்ட மேலும் ஏராளமான வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.. குறிப்பாக. சென்னை மாநகராட்சியில், 134வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாஜக தரப்பு மகிழ்ச்சியுடன் உள்ளது.. தலைவர்களுக்கும் ஒருவித நிம்மதியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது..

செய்தி
இப்படிப்பட்ட சூழலில் அடுத்தக்கட்டத்துக்கு தமிழக பாஜக எப்படி தன்னை நகர்த்தி கொண்டு போக போகிறது என்ற ஆர்வம் எழுந்துள்ளது.. அதேசமயம் நடந்து முடிந்த தேர்தல் குறித்து பாஜக தரப்பில், உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து வருகிறது.. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு முக்கியத்துவம் தரவில்லை, பேச்சுவார்த்தையில் இழுபறி நடக்கிறது என்று தெரிந்ததுமே, பாஜக மேலிடம் கொந்தளித்ததாம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு போனை போட்டு பேசியுள்ளார்.. அப்போது "ஒருவரை நம்பியே தேர்தலில் கூட்டணி வைத்து ஏன் போட்டியிட வேண்டும்? தனித்து போட்டியிட்டால், கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளை விட கூடுதலாக பெறலாம்.. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், தனித்தே போட்டியிடுங்கள்" என்று அண்ணாமலையிடம் சொன்னதே பிரதமர் மோடிதானாம்.. அதனால்தான், தனித்து போட்டி என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்தார் என்கிறார்கள்..

ரிசல்ட்
மேலிடம் நினைத்தது போலவே, அதிக ஓட்டுக்களையும் பெற்று, பாஜக முன்னேறி உள்ளது ஒட்டுமொத்த தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, ரிசல்ட் வெளிவந்த தினத்தன்று, அண்ணாமலைக்கு மறுபடியும் போனை போட்டு, ரிசல்ட் விவரங்களை கேட்டறிந்தாராம் பிரதமர்.. பாஜக மட்டுமல்ல, திமுக உட்பட மற்ற கட்சிகளின் விவரங்களையும் கேட்டறிந்துள்ளார்.

சென்னை
அப்போது, "கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் கிடைத்த வெற்றி எதிர்பார்த்ததுதான். இதில், சென்னை மாநகராட்சியில், ஒரே ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.. எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்.. அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டாம்.. இப்போதுள்ள நிலைமையே தொடருங்கள்.. ஆனால் எம்பி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்" என்றும் அறிவுறுத்தினாராம்.

எம்பி தேர்தல்
இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தமிழக பாஜக ஈடுபட ஆரம்பித்துள்ளது.. இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்த இடத்தை பாஜக பிடித்துள்ளது தெம்பை தந்துள்ளதால், நகரங்களை மையப்படுத்தியே பிளானை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.. கடந்த முறையே எம்பி தேர்தலில் நிறைய எம்பிக்களை தமிழகத்தில் இருந்து பெற்றாக வேண்டும் என்று பல வியூகங்களை பாஜக மேலிடம் கையில் எடுத்தது..
Recommended Video

திமுக
அப்போது சென்னைக்கு பிரச்சாரத்திற்கு வந்திருந்த அமித்ஷா, "என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது, தாமரை மலர்ந்தாக வேண்டும்" என்று சொல்லிவிட்டு சென்றார். இப்போதும் எம்பி தேர்தலுக்கான மும்முரத்தை கையில் எடுத்துள்ளது திமுக தரப்பை நிமிர வைத்துள்ளது.. இப்போதைக்கு திமுக எம்பிக்களே அதிகம் இடம்பெற்றுள்ள நிலையில், வரப்போகிற தேர்தலை முன்னிட்டு திமுகவும் தன் தரப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளது.. மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் எம்பி தேர்தலுக்கான களப்பணி துவங்கி உள்ளது தேசிய அரசியலில் கவனத்தை பெற்று வருகிறது...!
-
பெருந்துறை இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? பாஜகவில் செல்வாக்கை நிரூபிக்க ஆசிட் டெஸ்ட்? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications