தமிழ்நாட்டில் சொந்த காசில் சூனியம் வைக்கிறதா பாஜக.. அடுத்த வாரம் தேர்தல்.. தர்ம சங்கடத்தில் அதிமுக
சென்னை: தமிழ்நாட்டில் சொந்த காசில் சூனியம் வைக்கிறதா பாஜக.. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் இருக்கும் போது.. டெலிமிட்டேசன் ஏற்படுத்த போகும் தாக்கம் எப்படி இருக்கும் தெரியுமா? அதிமுக வெளியே சொல்ல முடியாமல் ஆடிப்போய்கிடக்கிறதாம்.. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை என்பது நிச்சயம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். ஆதாரங்களுடன் வட மாநிலத்திற்கு என்ன ஆதாயம், தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு என்று திமுக விளக்குவதை பார்க்கும் போது, பாஜகவே, திமுகவிற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2026-க்குப் பிறகு தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறையுமா என்றால்.. நிச்சயம் இல்லை.. தொகுதி எண்ணிக்கை உயரும், ஆனால் பலம் குறையும்.. உங்களுக்கு புரியவில்லையா, 1971 பாணியில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் எல்லா மாநிலங்களுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறது. எந்தமாநிலத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்று நினைத்தே 1971ல் என்ன முறை கடைபிடிக்கப்பட்டதோ அதே பாணியில் தான் மக்களவை தொகுதி நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதன்படி பார்த்தால் தமிழகத்தின் மக்களவை இடங்கள் தற்போதைய 39-லிருந்து சுமார் 59 ஆக அதிகரிக்கும். இது பார்க்க உயர்வாகத் தெரிந்தாலும், மொத்த நாடாளுமன்ற பலத்தில் தமிழகத்தின் பங்கு குறையும். ஏனெனில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இடங்கள் மிக அதிகப்படியாக உயரும். உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 80-லிருந்து 140-க்கும் மேலாக அதிகரிக்கக்கூடும்.
ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் (சுமார் 848 இடங்கள் எனில்), வடமாநிலங்கள் மட்டும் நினைத்தால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வரும். அப்போது தமிழகத்தின் 59 இடங்கள் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது என்கிறது திமுக. கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வியில் முன்னேறிய தமிழகத்திற்கு, இடங்களைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசு ஒரு "அரசியல் தண்டனை" வழங்குவதாகவே மக்களிடையே திமுக வலுவாக பிரச்சாரம் செய்கிறது.
தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், பாஜகவுடன் இணக்கமாக இருந்தால் "தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் திட்டமாக இதனை திமுக மக்களிடையே கொண்டு செல்ல திமுக எல்லா பலத்தையும் பயன்படுத்துகிறது.. அத்துடன் பாஜகவின் இந்ததிட்டத்திற்கு அதிமுக துணை போகிறது" என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறது திமுக. இது அதிமுக-வை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்தும் என்பது தான் அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 28 இடங்களில் நிற்கும் பாஜகவிற்குமே இது சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
சொந்த காசியில் பாஜக சூனியம் வைத்திருப்பதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் தமிழகத்திற்கு இடங்கள் 59 ஆகக் கூடினாலும், வடமாநிலங்களில் மிக அதிகமாக கூடும்போது, டெல்லியில் h பேரம் பேசும் சக்தி முற்றிலுமாக அழிந்துவிடும். இதுதான் தமிழ்நாட்டின் உண்மையான பயம் மற்றும் கோபமாக திமுக கூறி வருகிறது. தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்டை பாஜக செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றும், இது அதிமுகவில் கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications